search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிப்ஸ்"

    • துர்நாற்றத்தை போக்க சில எளிய வழிகள் உள்ளன.
    • குளிர்சாதன பெட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

    உங்கள் ஃபிரிட்ஜில் வீசும் துர்நாற்றத்தை போக்குவது என்பது சாதாரணமான வேலை அல்ல. ஆனால், அந்த துர்நாற்றத்தை போக்க சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்றும், அந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஃபிரிட்ஜை எப்படி சுத்தப்படுத்தலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

    முதல் படி, உங்கள் குளிர்சாதன பெட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கெட்டுப்போன அல்லது காலாவதியான உணவுப் பொருட்களை குளிர் சாதன பெட்டியில் இருந்து அகற்ற வேண்டும். குளிர்சாதன பெட்டியில் துர்நாற்றம் வீசுவதற்கு இவை முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். ஆதனால், தினமும் உங்கள் ஃபிரிட்ஜில் இருக்கும் பொருட்களை நீங்கள் சரி பார்க்க வேண்டும்.

    பேக்கிங் சோடா

    உங்கள் ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடாவை வைக்க வேண்டும் அல்லது பேக்கிங் சோடா நிறைந்த ஒரு சிறிய கிண்ணத்தை குளிர்சாதன பெட்டியின் அலமாரியில் வைக்கவும். இது ஃபிரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை உறிஞ்சி அவற்றை அகற்ற உதவும். இதனை 1 அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

    காபி பொடி

    குளிர்சாதன பெட்டியில் புதிதாக அரைக்கப்பட்ட காபி பொடியை கிண்ணத்தில் வைக்கவும். காபி பொடி உங்கள் ஃபிரிட்ஜில் உள்ள கெட்ட வாசனையை உறிஞ்சி மறைக்க உதவும். ஒவ்வொரு சில நாட்களுக்கும் அவற்றை மாற்ற வேண்டும்.

    வெண்ணிலா சாறு

    வெண்ணிலா சாற்றில் ஒரு பருத்தி உருண்டை அல்லது ஒரு துணியை ஊறவைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். வெண்ணிலா ஒரு இனிமையான நறுமணத்தை கொண்டுள்ளது, இது மற்ற வாசனைகளை மறைக்க உதவும்.

    சிட்ரஸ் தோல்கள்

    எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை மற்றும் பழங்களின் தோலை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். சிட்ரஸ் பழத்தோல்கள் புத்துணர்ச்சியூட்டும் வாசனையை கொண்டவை. இவை இயற்கை எண்ணெய்களை வெளியிடுகின்றன.

    வெள்ளை வினிகர்

    தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை வினிகர் ஆகியவற்றில் சம பாகங்களை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். அந்த கலவையை கொண்டு உங்கள் குளிர்சாதனப்பெட்டியின் உட்புறத்தைத் துடைக்கவும். வினிகர் கெட்ட நாற்றங்களை அகற்ற உதவும். இப்போது உங்கள் ஃபிரிட்ஜில் துர்நாற்றம் வீசாது.

    • சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் மாறாமல் இருக்கும்.
    • முட்டை கெட்டுப்போகாமல் இருக்க லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.

    * சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

    * பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

    * வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும் ருசியாக இருக்கும்.

    * சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.

    * முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.

    * கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.

    * ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    * இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்.

    * மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் மீது உப்பை கொட்டி, காற்றுபுகாதவாறு கட்டி வைத்தால் போதும்.

    * புளி குழம்பு தயாரிக்கும்போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.

    * முட்டை கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.

    * முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி காற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.

    * வாழைப்பூ சுத்தம் செய்யும்போது கையில் சிறிது நல்லெண்ணெய் தடவிக் கொண்டால் கையில் கறை ஒட்டாது.

    * காரக்குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் போதும். காரத்தின் வீரியம் குறைந்துவிடும்.

    * சோறு ஒட்டாமலும் உதிரியாகவும் இருக்க, அரிசி ஊற வைக்கும்போது சில ஐஸ் கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.

    * கறிவேப்பிலை வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரை கெட்டுப் போகாது.

    * மெதுவடை மொறு மொறு வென்று இருக்க, உளுத்தம் பருப்புடன் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.

    * பருப்பு வேக வைக்கும்போது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.

    * வீட்டில் எறும்பு புற்று இருந்தால் அங்கு கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புத்தொல்லை இருக்காது.

    * துண்களில் எண்ணெய் கறையோ கிரீஸ் கறையோ பட்டுவிட்டால் அதில் சிறிதளவு நீலகிரித்தைலம் விட்டு கழுவினால் அந்த கறை போய்விடும்.

    * ஃப்ரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் அவற்றை மூடி வைக்க கூடாது.

    * வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்துவிட்டு நறுக்கினால் கண்களில் எரிச்சல் இருக்காது.

    * அதிகம் கனமுள்ள கல்லை தோசைக்கும், கனம் அதிகம் இல்லாத கல்லை சப்பாத்திக்கும் பயன்படுத்த வேண்டும்.

    * சாதம் வடிக்கும் போது சிறிது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் குழையாமல் இருக்கும்.

    * கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அல்வா போன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் இருக்கும்.

    * உப்பு ஜடியில் தண்ணீர் வடிவதை தடுக்க அதில் புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீர் தன்மையை புளி எடுத்துவிடும்.

    * அதிகப்படியாக வாங்கி வைத்துள்ள எண்ணெய்யில் பச்சைமிளகாயை போட்டு வைத்தால் எண்ணெய் கசடு தங்காது.

    * சாம்பார் மணக்க, வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் கடைசியில் சேர்த்தால் சாம்பார் மணமாக இருக்கும்.

    * வெந்தயக்கீரை சமைக்கும் போது சிறிது வெல்லம் கலந்து சமைத்தால் கசப்பு தன்மை இருக்காது.

    * வாழைக்காயை நறுக்கும்போது சிறிதளவு உப்புத்தூளை கைகளில் தேய்த்துக்கொண்டால் கறைபிடிக்காது, பிசுபிசுப்பு நீங்கும்.

    * கறிவேப்பிலை செடி நன்றாக வளர புளித்த மோரை ஊற்றலாம்.

    * பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு காரட் சேர்த்து செய்தால் கசப்பே தெரியாது.

    • பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம்.
    • இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியம்.

    சமையல் அறையில் பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இட்லி. பணியாரம், வடை ஆகிய மூன்று ரெசிபிகள் தயாரிப்பதற்கும் ஒரே மாவை உபயோகிக்க முடியும். எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியத்துக்கும் தீங்கு ஏற்படுத்தாது, இல்லத்தரசிகள் இந்த பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம். அது பற்றிய தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - 3 கப்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 2 ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    முந்திரி- 20

    பச்சை மிளகாய் - 4

    கறிவேப்பிலை சிறிதளவு

    செய்முறை:

    அடிகனமான அகன்ற வாணலியில் ரவையை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்பு அதை ஒரு அகலமான தட்டில் மாற்றி ஆற வைக்கவும். அதே வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வறுக்கவும். பின்னர் அதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வறுக்கவும். பின்னர் உலர்ந்த கறிவேப் பிலை, உப்பு சேர்த்து ஆறவைக்கவும்.

    இந்த கலவையை ரவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பிரிமிக்ஸ் மாவு தயார். இந்த மாவைக் கொண்டு இட்லி, பணியாரம், வடை ஆகிய ரெசிபிகளை செய்து அசத்தலாம். இதனை காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் தேவைப்படும்போது விருப்பமான ரெசிபிகளை சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம். இந்த மாவை பிரிட்ஜில் வைத்து மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.

    உபயோகிக்கும் முறை:

    இரண்டு கப் பிரீமிக்ஸ் மாவுடன் ஒன்றரை கப் தயிர் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் மாவை ஒருமுறை நன்றாகக் கிளறி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

    இட்லி தயாரிக்க:

    எண்ணெய் தடவிய இட்லி தட்டில் மாவை ஊற்றி 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும். இப்போது சுவையான ரவா இட்லி ரெடி.

    குழிப்பணியாரம் தயாரிக்க:

    அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து அதன் குழிகளில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், அது சூடானதும் டீஸ்பூன் மூலம் மாவை ஒவ்வொரு குழியிலும் முக்கால் பங்கு அளவிற்கு ஊற்றி வேக வைக்கவும். ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான குழிப்பணியாரம் தயார்.

    வடை தயாரிக்க:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். தயாரித்து வைத்திருக்கும் மாவை வடையாக தட்டிப்போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். இதனுடன் தேங்காய் சட்னி, காரச்சட்னி, சாம்பார் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

    சந்தைப்படுத்தும் முறை:

    உணவுப் பொருட்களை முறையாக சந்தைப்படுத்தும் போது அதற்கு தேவையான சான்றிதழ்களை வாங்க வேண்டியது அவசியம், பிராண்டு பெயருடன் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட், மளிகை கடை ஆகியவற்றில் விற்பனை செய்யலாம். பொருட்காட்சிகளிலும் உங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தலாம்.

    • ரசத்தை நெய்யில் தாளித்தால் அதிக மணமாக இருக்கும்.
    • அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.

    * பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை நறுக்கி சேர்க்கலாம்.

    * சாம்பார், கூட்டு செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது கசகசாவை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

    * மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாயை நன்றாக வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு நல்ல நிறமாக காட்சி அளிக்கும். ருசியாகவும் இருக்கும்.

    * பாகற்காய் குழம்பில் கேரட் ஒன்றை துண்டுகளாக நறுக்கிப்போட்டால், கசப்புத்தன்மை அதிகம் இருக்காது.

    * அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.

    * ரசம் கொதிக்கும்போது அதில் புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்தால் ரசம் மணமாக இருக்கும்.

    * துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால், பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

    * ரசத்தை நெய்யில் தாளித்தால் அதிக மணமாக இருக்கும்.

    * சர்க்கரை இருக்கும் டப்பாவில் இரண்டு, மூன்று லவங்கத்தை போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

    * எலுமிச்சை சாதம் தயார் செய்யும்போது சாதம் சூடாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கசப்புத்தன்மை கூடும்.

    * பாலை நன்கு கொதிக்க காய்ச்சி பயன்படுத்த வேண்டும். அதாவது சுண்டக் காய்ச்ச வேண்டும். அதுதான் சரியானது.

    * தேங்காய்க்கு பதிலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கொரகொரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்து சமைத்தால் சுவை புதுமையாக இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சமைத்தால் கீரை பச்சை நிறம் மாறாமல் ருசியாகவும் இருக்கும்.

    * தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.

    * முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

    * மெதுவடை மொறு மொறு என்று இருக்க, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.

    ×