என் மலர்
நீங்கள் தேடியது "அணுஆயுதம்"
- சாத்தான்-2 ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் ‘சர்மட்’ கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளை (ஐ.சி.பி.எம்.) ரஷியா தயாரித்தது.
- குறைந்தது 10 முதல் 15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
மாஸ்கோ:
உக்ரைன் மீது போர் தாக்குதலை நடத்தி வரும் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் வலுவடைந்து உள்ளது. அதே போல் மேற்கத்திய நாடுகளுடன் ரஷியாவின் மோதல் நீடித்து வருகிறது.
இதற்கிடையே சாத்தான்-2 ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் 'சர்மட்' கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளை (ஐ.சி.பி.எம்.) ரஷியா தயாரித்தது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.
இந்நிலையில் சர்மட் ஏவுகணைகளை நிலை நிறுத்தி உள்ளதாக ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அறிவித்தது. இது தொடர்பாக விண்வெளி நிறுவன பொது இயக்குனர் யூரி போரிசோவ் கூறும்போது, சர்மட் ஏவுகணைகள் தனது பணியை செய்வதற்கான கடமையில் வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன சர்மட் ஏவுகணைகள் ராணுவ படையில் இணைக்கப்பட்டு உள்ளது. அவை பன்டுத்துவதற்கு தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளன என்றார். இது ஆர்.36 ஏவுகணைக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டு உள்ளது.
சர்மட் ஏவுகணை முதன் முதலில் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது குறைந்தது 10 முதல் 15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. சுமார் 116 அடி நீளமும், 220 டன் எடையும் கொண்டதாகும். ஒரு ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் தொழில்நுட்பம் அதில் பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஊடகங்கள் கூறும்போது, சர்மட் ஏவுகணைகளை நிலை நிறுத்தும் நடவடிக்கை அமெரிக்காவுக்கும், நேட்டோவுக்கும், ரஷியா தனது அணுசக்தி தாக்குதல் விருப்பம் இன்னும் மேஜையில் உள்ளது என்ற செய்தியை அனுப்புகிறது என்று தெரிவித்தது.
ஏற்கனவே சர்மட் ஏவுகணை குறித்து ரஷியா அதிபர் புதின் கூறும்போது, இந்த ஏவுகணைகள், ரஷியாவுடன் போரில் ஈடுபடும் முன் உலகையும் எதிரிகளையும் ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க வைக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன தொழில்நுட்பங்களை கொண்ட சர்மட் ஏவுகணை அதிபயங்கரமானவை என்று கருதப்படுகிறது.
தற்போது சர்மட் ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டதன் மூலம் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா மறைமுக எச்சரிக்கை விடுத்து உள்ளது.
- நியூயார்க்கில் அணுஆயுத தடை ஒப்பந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
- பார்வையாளராக கலந்து கொண்டு ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகமிக முக்கியமானது. இதனால் ஐ.நா. அணுஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள மாட்டோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டால் அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிமசா ஹயாஷி கூறுகையில் "ஜப்பானின் தேசிய பாதுகாப்புதான் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
"கடுமையான பாதுகாப்பு சூழலின் கீழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும், ஜப்பானின் இறையாண்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும் அணுசக்தித் தடுப்பு இன்றியமையாதது" எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.
ஐ.நா.வின் 2017-ம் ஆண்டு அணுஆயுத தடை ஒப்பந்தத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஒப்புதல் கிடைத்தது. இது 2021-ம் ஆண்டு நடைமுறைக்கு கொணடு வரப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதேபோன்று மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஐ.நா. இந்த நடவடிக்கையை கொண்டு வந்தது.
அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மட்டும் இன்னும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை எனக் கூறி ஜப்பான் கையெழுத்திட மறுத்துவிட்டது.