search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக் போட்டிகள்"

    • உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.
    • 206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, ஒலிம்பிக்ஸ் விளையாட்டு. அங்கு ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டது. இதில் யுத்தத்துக்கு தயாராவதற்கு உதவக்கூடிய ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு அனுமதி இல்லை.

    2-வது ஒலிம்பிக்ஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1900-ம் ஆண்டில் நடந்தது. 24 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர், வீராங்கனைகள் 19 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.இந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும்.

    ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 162 படகுகள் மூலம் வீரர்கள் மற்றும் கலைஞர்களை செய்ன் நதிக்கு அழைத்து வந்து, சுமார் 6 கி.மீ தூரப்பாதையில் 4 மணி நேரம் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • புடாபெஸ்ட் நகர போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்
    • தற்போது 12-நாள் பயிற்சி முகாமிற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்

    ஈட்டி எறிதல் விளையாட்டில், ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் டயமண்ட் லீக் போட்டிகள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து பல கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்தவர் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா.

    சமீபத்தில் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் ஈட்டி எறிதல் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். அவருக்கு 2022-ம் ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான சுவிட்சர்லாந்து நாட்டில் அந்நாட்டிற்கான 'நட்பு தூதர்' அந்தஸ்து வழங்கப்பட்டது.

    நட்பு தூதராக, தனது அனுபவங்களை அந்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் அந்நாட்டில் உள்ள தனித்துவம் வாய்ந்த பனிச்சறுக்கு விளையாட்டுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி விளையாட்டு சுற்றுலாவிற்கான முக்கிய நாடாக சுவிட்சர்லாந்து நாட்டை விளம்பரப்படுத்தி வருகிறார்.

    தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் 12-நாள் பயிற்சி முகாமிற்காக அங்குள்ள மேக்லிங்கன் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பும், சிறப்பான உபசரிப்பும் வழங்கப்பட்டது.

    இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையில் உலகளாவிய கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கல் ப்ரின்ஸ் கூறும் போது, "இந்திய விளையாட்டு துறையின் சாதனையாளரான நீரஜ் சோப்ராவை எங்கள் நாட்டின் சார்பாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறோம். நீரஜ் ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்தும் சக்தி படைத்தவர். இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவரது உலக சாதனைகளுக்காக அவரை பாராட்டுகிறோம். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.

    சுவிட்சர்லாந்து சென்றுள்ள நீரஜ் சோப்ரா, அங்குள்ள பனி மலைகளில் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவிட்டு வருகிறார்.

    ×