என் மலர்
நீங்கள் தேடியது "வீரேந்தர் சேவக்"
- இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர்.
- எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.
குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.
பிசிசிஐ மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் ஏந்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். டீம் இந்தியா அல்ல. டீம் பாரத். தனது கருத்து அரசியல் சார்பு சார்ந்தது அல்ல. சமீபத்திய தேர்தல்களில் இரண்டு அரசியல் கட்சிகளின் சலுகைகளை நான் நிராகரித்தேன்.
ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை பர்மா மீண்டும் மியான்மர் என மாற்றியது. மேலும் பலர் தங்கள் அசல் பெயருக்கு திரும்பிவிட்டனர்.
என அவர் கூறினார்.