search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் ஆப்பிரிக்கா அணி"

    • டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சில் திணறியது.

    அபுதாபி:

    தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் அபுதாபியில் நடந்தது. டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. ரியான் ரிக்கல்டன் 91 ரன்னும், ஸ்டப்ஸ் 79 ரன்னும் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் மார்க் அடேர் 4 விக்கெட்டும் கிரேக் யங் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சில் திணறியது. அயர்லாந்து 31.5 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிசாட் வில்லியம்ஸ் 4 விக்கெட்டும், நிகிடி, பார்டுயின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இரு அணிகள் மோதும் 2-வது போட்டி நாளை நடக்கிறது.

    • 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    • தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக். இவர் 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார். தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    30 வயதான குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்காவுக்காக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுவார். 140 போட்டிகளில் இடம்பெற்றுள்ள அவர் 17 சதம் மற்றும் 29 அரை சதங்களுடன் 44.85 சராசரியுடன் 5966 ரன்களை எடுத்துள்ளார். டி காக் ஒருநாள் போட்டிகளில் 197 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். (183 கேட்சுகள், 14 ஸ்டம்பிங்).

    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று இந்தியா அறிவித்தது.
    • அக்டோபர் 7-ந் தேதி தென் ஆப்பிரிக்கா அணி முதல் லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர் கொள்கிறது.

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று இந்தியா அறிவித்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியும் உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது.

    அக்டோபர் 7-ந் தேதி தென் ஆப்பிரிக்கா அணி முதல் லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர் கொள்கிறது.

    தென்னாப்பிரிக்கா அணி:

    1. டெம்பா பவுமா (கேப்டன்) 2. ஜெரால்ட் கோட்ஸி 3. குயின்டன் டி காக் 4. ரீசா ஹென்ட்ரிக்ஸ் 5. மார்கோ ஜான்சன் 6. ஹென்ரிச் கிளாசென் 7. சிசண்டா மகலா 8.கேசவ் மஹராஜ் 9. ஐடன் மார்க்ரம் 10. டேவிட் மில்லர் 11. லுங்கி என்கிடி 12. அன்ரிச் நார்ட்ஜே 13. தப்ராஸ் ரபஹாம் 14. டாகிசோ ரபஹாம் 15. ராஸ்ஸி வான் டெர் டுசென்.

    ×