என் மலர்
நீங்கள் தேடியது "கொல்ல முயன்ற கும்பல்"
- கும்பல் தாக்கியதில் மயக்க நிலையில் இருந்த வாலிபரை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
- வாலிபரின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பச்சமலையான்கோட்டை இந்திராநகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 60). இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
3-வது மகன் மகாலிங்கம் (வயது 25) என்பவர் பூ வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்த ன்று ஜி.கல்லுப்பட்டி புஷ்பராணி நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்தார்.
இது குறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. மயக்க நிலையில் இருந்த மகாலிங்கத்தை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இவரது நண்பர்கள் அனைவரும் சம்பவத்தன்று பிறந்தநாள் விழாவை கொண்டாடுவத ற்காக மது குடித்துக் கொண்டு இருந்ததாகவும், அப்போது அங்கு சென்ற மகாலிங்கம் தனியாக நடந்து சென்றார்.
அப்போது மர்ம நபர்கள் அவரை தாக்கி விட்டு கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்களை கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமார் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், சப்-இன்ஸ்பெ க்டர் வேல்மணிகண்டன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.