search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருநாள் உலகக் கோப்பை 2023"

    • கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
    • அதற்கான நான் அணி நிர்வாகத்திடம் எனக்கு ஒரு ஐந்து நாள் ஓய்வு கொடுங்கள், இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து விடுகிறேன் என்று கூறினேன்.

    ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடந்த சீசன் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

    இத்தொடரின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டார் ஹர்திக் பாண்ட்யா காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களிலிருந்தும் விலகினார். இதையடுத்து தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் வரவுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்படவுள்ளார்.

    இந்நிலையில் கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக கடந்த ஓராண்டு காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். மேலும் ஒன்றரை ஆண்டு காலமாக எனது தனிப்பட்ட பயிற்சிகளில் கவனத்தை செலுத்தினேன். ஆனாது துரதிர்ஷ்டவசமாக உலகக்கோப்பை தொடரின் போது எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தால் என்னால் நடக்கக்கூட முடியவில்லை. எனினும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் முடிவில் நான் இல்லை. கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    அதற்கான நான் அணி நிர்வாகத்திடம் எனக்கு ஒரு ஐந்து நாள் ஓய்வு கொடுங்கள், இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து விடுகிறேன் என்று கூறினேன். அதற்காக எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன்.

    ஆனால் அந்த ஐந்து நாளில் நான் எடுத்த முயற்சிகள் எனக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. நான் ஓய்வு எடுக்காமல் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என முயற்சி செய்ததால், அந்த ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது. உலகக் கோப்பையில் முழுமையாக பங்கேற்க முடியாதது என்றும் என் இதயத்தில் கனமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது கால் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவதாக தெலுங்கு நடிகை தெரிவித்தார்.

    ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரில் விளையாடியதன் மூலம் இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

    உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பிரதமர் மோடி உள்பட விளையாட்டு பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் கண்டு களித்தனர். உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னர் சச்சின் 2011 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசளித்தார்.


    2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அது என்னவென்றால் உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவதாக அவர் தெரிவித்தார். சில குறும்புக்கார ரசிகர்கள் 'விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்' என்றெல்லாம் 'கமெண்ட்' செய்தனர்.


    ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபட்டது.


    ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று அபார சாதனை படைத்துள்ளது.


    அதன் விவரம் வருமாறு:

    1987, 1999, 2003, 2007, 2015 என ஆஸ்திரேலியா அணி 5 முறை ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது.2006 மற்றும் 2009ம் ஆண்டில் சாம்பியன் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

    ஒரு உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக அதிக ரன் திரட்டிய கேன் வில்லியம்சனின் (2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 ஆட்டத்தில் 578 ரன்) சாதனையை ரோகித் தகர்த்தார். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்சர் அடித்த கிறிஸ் கெய்ல் (85) சாதனையை ரோகித் (86) முறியடித்தார்.


    இந்திய வீரர் விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் 3 சதம், 6 அரைசதம் உள்பட 765 ரன்கள் எடுத்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்து விட்டார். இதில் கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 50 ரன்னுக்கு மேல் எடுத்ததும் அடங்கும். உலகக் கோப்பையில் 2-வது தடவையாக அவர் தொடர்ந்து 5 ஆட்டங்களில் 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார்.

    உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது கால் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. ரன்னர் அப் அணிக்கு சுமார் ரூ.16 கோடி பரிசும், அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசும் அறிவிக்கப்பட்டது. மேலும், குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.82 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    • உலகக் கோப்பையை வென்றால் மட்டுமே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • உலகக் கோப்பையை இந்திய கைப்பற்றாவிட்டால் அவரத ஒப்பந்தம் நீட்டிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக ஐ.சி.சி. உலக கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை கிடைத்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டில் 2-வது தடவையாக உலக கோப்பையை பெற்றோம்.

    இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2013-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ஐ.சி.சி. போட்டிகளில் இந்தியா திணறி வருகிறது. இதனால் இந்த உலகக் கோப்பயை வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கிறார். 'சுவர்' என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டனான அவரது பயிற்சியாளர் பதவிக்காலம் உலகக்கோப்பை போட்டியோடு முடிவடைகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவர் பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகக் கோப்பையை வென்றால் மட்டுமே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.

    உலகக் கோப்பையை இந்திய கைப்பற்றாவிட்டால் அவரத ஒப்பந்தம் நீட்டிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர் வரை டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கப்படலாம் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த ஒருவரும் இடம் பெறவில்லை.
    • குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் ஆதிக்கம் உள்ளது.

    கேப்டன் ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷன், ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய 4 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உலகக் கோப்பை அணியில் உள்ளனர்.

    குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2 பேரும் (ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்கூர்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் 2 வீரர்களும் (விராட் கோலி, முகமது சிராஜ்), டெல்லி கேப்பிடல்சில் 2 பேரும் (அக்ஷர் படேல், குல்தீப் யாதவ்), லக்னோ (கே.எல்.ராகுல்), சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜடேஜா) அணிகளில் தலா ஒருவரும் உலகக் கோப்பைக்கு தேர்வாகி உள்ளனர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த ஒருவரும் இடம் பெறவில்லை.

    ×