என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்திய ஜி20 உச்சி மாநாடு"
- உலக தலைவர்களுக்கு பாதுகாப்பும், உபசரிப்பும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- டெல்லியில் ஒரு குஜராத் மாடல் எனும் செய்தியுடன் இவ்வீடியோ பரவியது
இந்திய தலைநகர் புது டெல்லியில் 19 உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தியா வரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும், நகரை தூய்மைப்படுத்தும் பணிகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது.
அதில், ஒரு சேரி முழுவதும் பச்சை நிற துணி படுகைகளாலும், ஜி20 எனும் விளம்பரங்களை கொண்ட தாள்களுடனும் போர்த்தப்பட்டு இருப்பது தெரிந்தது. ஜி20 தலைவர்களின் வருகைக்காக சேரிகளை (புது டெல்லியில்) அரசு மறைக்கிறது என குறிப்பிட்டு "டெல்லியில் குஜராத் மாடல்" எனும் செய்திப் பதிவும் இதனுடன் வெளியானது. ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவே கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில், ஜி20 உறுப்பு நாடுகளின் பல்வேறு பிரதிநிதிகளுடன் பல்வேறு துறையை சேர்ந்த இந்திய அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இதில் பல சந்திப்புகள் மும்பை நகரில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவில் காணப்படும் இடம் மகாராஷ்டிராவில் உள்ள வடமேற்கு மும்பையின் மேற்கு விரைவு நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள ஜோகேஷ்வரி சேரிப்பகுதியாகும். போரிவலி பகுதியில் உள்ள பூங்காவை காண அந்த விரைவுச்சாலை வழியாக ஜி20 பிரமுகர்கள் டிசம்பர் 2022ல் சென்ற போது சாலையோர சேரிகள் மறைக்கப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது மும்பைக்கு பதிலாக டெல்லி என குறிப்பிடப்பட்டு வைரலாகியது.
"ஏப்ரல் 1 முதல் ஜூலை 27 வரை 49 குடியிருப்புகள் பல்வேறு காரணங்களுக்காக அகற்றப்பட்டதாகவும் ஆனால் ஜி20 உச்சி மாநாட்டிற்காக டெல்லி நகரை அழகுபடுத்த எந்த குடியிருப்பு பகுதியிலும் அகற்றல் நடவடிக்கையோ, மறைத்தலோ நடக்கவில்லை" என வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்