என் மலர்
நீங்கள் தேடியது "ஜான்சீனா"
- ஜான்சீனா களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம்.
- ஜான்சீனாவுடன் சந்திப்பு குறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.
இந்த நிலையில், "WWE சூப்பர்ஸ்டார் ஸ்பெக்டக்கில்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஐதராபாத் வந்துள்ள ஜான்சீனாவை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்துள்ளார். ஜான்சீனாவுடன் சந்திப்பு குறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
A great pleasure meeting you @JohnCena. Thank you for being so kind and warm. It's wonderful how you could make everyone feel special in those few minutes. Hustle Loyalty Respect - felt all of that :) #WWESuperstarSpectacle Hyderabad.@WWEIndia @SonySportsNetwk pic.twitter.com/phcsUhtbVD
— Karthi (@Karthi_Offl) September 8, 2023
அதில், "உங்களை சந்தித்தது மிகவும் பெருமையாக உள்ளது. மிகவும் அன்பாக இருந்ததற்கு மிக்க நன்றி. உங்களுக்கு கிடைக்கும் சில நிமிடங்களிலேயே அனைவரையும், சிறப்பானவர்களாக உணரச் செய்யும் உங்கள் பண்பு அருமையாக உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.