search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரவு உணவு"

    • சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம்.
    • இரவு உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகாது.



    நடப்பது

    இரவு உணவு சாப்பிட்ட உடனேயே சிறிது நேரம் நடக்க வேண்டும் என்று கூறப்படு கிறது. இவ்வாறு செய்வது உடல் நலத்துக்கு நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. ஏனெனில் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய் வதால் கை, கால்களுக்கு ரத் தம் செல்லும். இது செரிமானத் தில் குறுக்கிடுகிறது. எனவே சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம். ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் கழித்து நடக்கலாம்.


    தண்ணீர் பருகுவது

    நம் உடலுக்கு தண்ணீர் தேவை. ஆனால் அதை சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு தண்ணீர் பருக வேண்டாம். குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் காத்திருக்கவும்.


    பழங்கள் சாப்பிடுவது

    இரவு உணவு உண்ட உடனேயே பழங்கள் சாப்பிடு வதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதை செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகாது. பல் துலக்குவது.


    பல் துலக்குவது

    இரவு உணவு உண்ட உடனேயே பல் துலக்கும் பழக்கமும் பலருக்கும் உண்டு. ஆனால் அது. பல்லின் எனாமல் அடுக்கை பாதிக்கும். அதனால் பற்கள் இயற்கையான பொலிவை இழக்கும். எனவே இரவு உணவு உண்ட உடனே பல் துலக்க வேண்டாம். குறைந்தது 30 நிமிடங்களாவது காத்திருந்து பல் துலக்கலாம்.


    டீ, காபி குடிப்பது

    பலர் இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடிப்பார்கள். இரவுப் பணியில் இருப்பவர்கள் அதிகமாக காபி, டீ அருந்துவார்கள். உண்மை யில் இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடித்தால்,செரிமானம் பாதிக்கப்படும். வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் ஏற்படும். உண்ணும் உணவில் உள்ள சத்துகள் உடலுக்கு கிடைக்காது. முக்கியமாக இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படாது. எனவே சாப்பிட்ட உடனேயே காபி, டீ குடிக்க வேண்டாம்.


    குளிப்பது

    சாப்பிட்ட உடனேயே குளித்தாலும், உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் ரத்தம் செரிமான மண்டலத்துக்குச் சரியாகப் போவதில்லை. இதனால் செரிமானம் சீராக நடைபெறாது.


    உறங்குவது

    சிலர், சாப்பிட்ட உடனே படுக்கையில் சாய்ந்துவிடு வார்கள். அவ்வாறு உடனே உறங்க வேண்டாம். இவ்வாறு செய்வதால் செரிமான பாதிப்பு ஏற்படும். வாயு. அமிலத்தன்மை அதிகரித்து, உண்ணும் உணவு கொழுப்பாக மாறும். எனவே உடல் எடை கூடும். அதனால் படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டுவிடுங்கள்.

    • குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    • காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். அதன் மூலம் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்று நம்புகிறார்கள். அப்படி கலோரிகளை வேகமாக எரிப்பதன் மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியாது. உடற்பயிற்சி வழக்கத்தை முறையாக பின்பற்றி வருவதுடன் மேலும் சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.

    1. தண்ணீர்:

    காலையில் எழும்போது பலருக்கும் ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். பல் துலக்கியதும் தண்ணீர் பருகுவதன் மூலம் அதனை விரட்டியடிக்கலாம். ஒரு டம்ளர் சூடான நீருடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். சியா விதை அல்லது ஆளிவிதையை சூடான நீரில் கலந்தும் பருகலாம். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். அதனால் காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்யலாம். உடல் எடை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தலாம்.

    2. உடற்பயிற்சி:

    தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது முடியாத பட்சத்தில் ஏதாவதொரு யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். அது சுறுசுறுப்பாக உணர வைக்கும். அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு மன ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

    3. புரதம்-நார்ச்சத்து:

    காலை உணவை ஒரு போதும் தவிர்க்கக்கூடாது. அது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாக அமைந்திருப்பது சிறப்பானது. நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை அவை தரும். மதிய உணவுக்கு இடையே தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதையும் தடுக்க உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

    4. நீர்ச்சத்து:

    எல்லா பருவ காலநிலையிலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதிலும் கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறி எலக்ட்ரோலைட் சம நிலையின்மை மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அடிக்கடி பருக வேண்டும். அவை உடல் எடையை குறைப்பதற்கும் வித்திடும்.

    5. நீச்சல்:

    நீச்சல் மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும். உடலுக்கும் சிறந்த பயிற்சியாகவும் அமையும். கோடையில் ஏற்படும் சோர்வை விரட்டி உற்சாகத்தையும் கொடுக்கும். நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது டோபமைன் வெளியீட்டை தூண்டும். தொப்பை கொழுப்பை எரிப்பதற்கு இது நல்ல பயிற்சியாகவும் அமையும்.

    6. இரவு உணவு:

    கோடை காலத்தில் இரவு உணவை குறைவாகவே சாப்பிட வேண்டும். அவை எளிதில் செரிமானமாகும் விதமாகவும் இருக்க வேண்டும். இரவில் தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    7. தூக்கம்:

    முறையான தூக்கம் முக்கியம். அது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். போதுமான நேரம் தூங்காதது எடை அதிகரிப்பு மற்றும் பசிக்கு வழிவகுக்கும்.

    • சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.
    • இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம்.

    சென்னை:

    சென்னையில் சாலை யோரம் வசிக்கும் ஆதர வற்றோர்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விசேஷமான தினங்களில் சாப்பாடு வாங்கி கொடுக்கும் பழக்கத்தை பலர் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் காலை உணவு மற்றும் மதிய உணவுகளையே வழங்குவார்கள். இரவு நேரங்களை கணக்கிட்டு பலரும் உணவு வழங்குவதில்லை.

    இந்நிலையில் சென்னையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் பசியை போக்கும் வகையில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 'சென்னை ரொட்டி பேங்க்' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி தினமும் இரவு உணவை வழங்கி வருகிறார்.

    2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் லத்திகாசரணுடன் சுஜாதா விஸ்வநாத், மகாதேவன், நிசாத் பசீர், ராஜீவ் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மெண்டல் ஹெல்த் (ஐ.எம்.எச்) மையத்தில் சேர்த்து சிகிச்சை பெறும் பெரும்பாலானோர் வறுமையில் வாடுபவர்களாகவே உள்ளனர். இதுபோன்ற நபர்களை சிகிச்சைக்காக அழைத்து வருபவர்கள் தங்களது கூலி வேலையை விட்டுவிட்டே அவர்களோடு வந்து தங்குகிறார்கள்.

    இப்படி ஐ.எம்.எச்.சில் இரவில் தங்குபவர்களுக்கு இரவு உணவை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட இந்த உணவு வழங்கும் திட்டத்தை பின்னர் படிப்படியாக விரிவுபடுத்த இருக்கிறோம் என்றார் முன்னாள் டி.ஜி.பி. லத்திகா சரண்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, ஐ.எம்.எச். மையத்தில் உணவு வழங்கி விட்டு சேத்பட்டில் 25 திருநங்கைகளுக்கு உணவு வழங்கப்படும். சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் என்றார்.

    மும்பையில் எனது 'பேட்ஜ்மேட்' ஆன சிவானந்தன் என்பவர் அங்கு 'ரொட்டி பேங்க்' என்ற பெயரில் மும்பை வாசிகளுக்கு இரவு உணவை ரொட்டியாக வழங்கி வருகிறார். அதுவே எங்களது இரவு சாப்பாடு வழங்கும் திட்டத்துக்கு முன்னோடியாகும்' என்று கூறிய லத்திகா சரண் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். தமிழக காவல் துறையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்த லத்திகா சரண் பணி காலத்தில் பல்வேறு உதவிகளை பலருக்கும் செய்து உள்ளார். ஓய்வுக்கு பிறகும் அதுபோன்ற பணியை அவர் தொடர்ந்து பசியாற்றி வருவது பாராட்டுக்குரியது தான்.

    ×