என் மலர்
நீங்கள் தேடியது "குலசேகரப்பட்டினம்"
- ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.
- குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரே நேரத்தில் 2 புதிய ஏவுதளங்களை உருவாக்கி திறன்களை விரிவுபடுத்த உள்ளது. குறிப்பாக, ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.
தற்போது 30 டன் எடையை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவும் திறன் கொண்ட 3-வது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.
இந்த 2 ஏவுதளங்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இஸ்ரோவின் வளர்ந்து வரும் ஏவுதளத்தின் சக்தியை அதிகரிப்பதுடன், திறன்களையும் மேம்படுத்த உதவும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
- முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்.
- பக்தர்கள் வேடமணிந்து தர்மம் வாங்கி தங்களது வேண்டுதல்களை செலுத்துவார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.
இங்கு நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடமும், இந்தியாவில் 2-வது இடமும் வகிக்கிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந்தேதி மகிசா சூரசம்காரம் நடக்கிறது.
இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து தர்மம் வாங்கி தங்களது வேண்டுதல்களை செலுத்துவார்கள். இதற்காக பக்தர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 7 நாள், 11 நாள், 21 நாள், 31 மற்றும் 41 நாள் என கணக்கிட்டு விரதத்தை தொடங்கு வார்கள். முன்னதாக குலசேகரன்பட்டினம் கடற்கரைக்கு வந்து, படிகம், பாசி மற்றும் ருத்ராட்ச மாலைகளை தேர்வு செய்து அதை வாங்கி கடலில் கழுவி, குளித்து விட்டு, கோவிலுக்கு வந்து வணங்கி, சிலர் கோவிலில் பூஜை செய்து பூசாரி கையினால் அல்லது தன்னைவிட வயது கூடுதல் உள்ள பெரியவர்கள் கையினால் மாலையை கழுத்தில் அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
இதற்காக குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ஏராளமான பாசிமாலை கடைகள் உருவாகி உள்ளன. பக்தர்களும் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்துவிட்டு பின்பு கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
திருவிழா ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையினரும், கோவில் நிர்வாகமும் செய்து வருகின்றனர்.
- முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி.
- அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் சேர்ப்பர்.
அன்னை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி. அதனால்தான் ஏராளமான கோவில்களில் முளைப்பாரி நேமிசம் நடைபெறும். 8 நாள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சுத்தமாக இருந்து அன்னை முத்தாரம்மனின் திருநாமத்தை மனதில் நிலை நிறுத்தி, அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் கொண்டு சேர்க்கின்றனர்.
பயிறு விதை போட்டவர்கள் பல நூறு கோடி பயன்பெறவும்
எள்ளு விதை போட்டவர்கள் என்னாளும் வாழ்ந்திடவும்
கானம் விதை போட்டவர்கள் கஷ்டங்கள் விலகிடவும்
கடலை அவரை விதை போட்டவர்கள் அன்னை முத்தாரம்மனை நினைத்திடவும்
என்று நவதானியத்திற்கு உரிய பாடல்களை பாடி அம்மனை நோக்கி ஆலயத்திற்கு வந்து அனைத்து செல்வங்களையும் அடைகின்றனர்.