என் மலர்
நீங்கள் தேடியது "அனந்த்நாக்"
- ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாட்களாக துப்பாக்கிச் சண்டை
- ரஜோரி, அனந்த்நாக் சண்டையில் வீரர்கள், போலீசார் வீரமரணம்
ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளூர் போலீசார் உடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனந்த்நாக் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு உயர் அதிகாரிகள் உள்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதுதொடர்பாக பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் கூறுகையில் ''நம்முடைய வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துடன் ஒட்டுமொத்த நாடும் இருக்கிறது. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை மன்னிக்கமாட்டோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு பா.ஜனதாவின் தலைமை கழகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா தலைவர்கள் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.