search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஞ்சநேயர் வால் வழிபாடு"

    • அனுமன் என்றால் தாடை நீண்டவர் என பொருள்படும்.
    • வாயு அம்சமான அனுமன் சிவனின் அம்சமாகவே அருள் தருகின்றார்.

    மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என உள்ள பஞ்சபூத அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று ஒடுங்குவது, ஆனால் இவ்வனைத்தும் சிவனில் ஒடுங்குவதால் வாயு அம்சமான அனுமன் சிவனின் அம்சமாகவே அருள் தருகின்றார்.

    அனுமனின் பெயர்கள்

    பாவங்களில் இருந்து விடுதலை செய்பவர் என பொருள் படும் "பவமானர்" என்றும், கவிகளின் அரசன் என்ற பொருளில் "கபீஷர்" என்றும் வேதங்களில் அனுமனுக்கு இரு பெயர் உள்ளது.

    மேலும் ராமபக்தர், வாயுபுத்திரர், அஞ்சனை மைந்தர் ஆஞ்சனேயர், ஹனுமான் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் அனுமன்.

    அனுமன் தாடை நீண்டவர்

    அனுமன் என்றால் தாடை நீண்டவர் என பொருள்படும்.

    ஒரு முறை சூரியனைப் பார்த்து விண்ணில் தெரியும் கனி என நினைத்து ஆகாயத்தில் சூரியனை பிடிக்க தாவிப் பறந்து செல்கிறார் வாயு புத்திரன்.

    அப்பொழுது தேவலோகத்திற்குள் வரும் இவரை இந்திரன் இந்திராயுதத்தால் தடுக்கும் போது தாடையில் பட்டு தாடை நீண்டு விடுகிறது.

    எனவே அன்று முதல் ஹனுமன் என்றழைக்கப்பட்டார். எனவே அனுமனின் தாடை நீண்டு இருக்கும்.

    • சுவாமி சந்நதி அருகில் உள்ள தூணில் உள்ள ஆஞ்சநேயர் வளர்ந்து கொண்டே வருகின்றார்.
    • உடுமலை சீனிவாச ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் கருணையுள்ளவர்.

    சென்னை நங்கநல்லூர், ஆதி வியாதிஹரஆஞ்சநேயர் கோவில், சுசீந்திரம், நாமக்கல்லில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், திருக்கடையூர் அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவில்,

    செம்பட்டி நிலக்கோட்டை வழியில் அனைப்பட்டியில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்,

    சின்னாளப்பட்டி அருகில் மேட்டுப்பட்டியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்,

    தாராபுரம் காடுஅனுமந்தராய சுவாமி கோவில், புதுச்சேரி நலன்குளம் அருகில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் அனுமனின் அனுக்கிரகங்களை அள்ளித் தரும் ஆலயங்கள்.

    முடிந்த மட்டும் இவ்வாலயலங்களுக்கு சென்று வர மேன்மை உண்டாகும்.

    அனைத்து பெருமாள், ராமர் கோவில்களிலும் எழுந்தருளும் ஆஞ்சநேயரை இந்நாளில் வழிபட அனைத்து யோகமும் கிடைக்கும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சந்நதி அருகில் உள்ள தூணில் உள்ள ஆஞ்சநேயர் வளர்ந்து கொண்டே வருகின்றார்.

    எனவே மீனாட்சி கோவில் சென்றால் இவரை வணங்காமல் வந்துவிடாதீர்கள்.

    இவரை வணங்க உங்கள் வம்சமும் வளர்ந்து வரும்.

    கோவை பீளமேடு அஷ்டபுஜ ஆஞ்சநேயர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது.

    இங்குள்ள ஆஞ்சநேயர் சிரசில் சிவலிங்கம், நாகம், சாலிகிராமம் உள்ளன.

    உடுமலை சீனிவாச ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் கருணையுள்ளவர்.

    • ஆஞ்சநேயர் சகஸ்ர நாமா வழி போன்றவற்றை வீட்டில் படித்து பூஜை செய்து மகிழலாம்.
    • ராமா, ராமா எனும் ராம நாமம் ஜெபித்தாலே ஆஞ்நேயர் அருகில் வந்து அருள் தருவார்.

    ஆஞ்சனேயருக்கு பழவர்க்கங்கள் மிகவும் பிரீத்தி என்பதால் வீட்டில் ஆஞ்ச நேயர் படம் வைத்து நான்கு புறத்திலும் பந்தல் போல் செய்து,

    பந்தலில் பூச்சரம் ஒரு வரிசையும், பழச்சரம் ஒரு வரிசையுமாக கட்டி பழப்பந்தல், பூப்பந்தல் அலங்கரிக்க வேண்டும்.

    வடை, வெண்ணெய் வைத்து நெய் தீபம் ஏற்றி ராமாயணத்தின் சுந்தரகாண்டம்,

    ஆஞ்சநேய தண்டகம், ஸ்ரீ அனுமத்துதி (சாம்பவான் புகழ்தல்) ஸ்ரீஆஞ்சநேயர் திருப்பதிகம், மாருதி கவசம்,

    ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ஆஞ்சநேயர் போற்றி வழிபாடு, ஆஞ்சநேயர் சத நாமா வழி,

    ஆஞ்சநேயர் சகஸ்ர நாமா வழி போன்றவற்றை வீட்டில் படித்து பூஜை செய்து

    அருகில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக தந்து மகிழலாம்.

    இத்தனை வகையும் தெரியாதே என யோசிக்க வேண்டாம், ராமா, ராமா எனும் ராம நாமம் ஜெபித்தாலே ஆஞ்நேயர் அருகில் வந்து அருள் தருவார்.

    உங்கள் குழந்தைகளுக்கு ஆஞ்சநேயரின் பராக்கிரமங்களை இன்று சொல்லி வையுங்கள் பயமின்றி படிப்பார்கள்.

    • புத்திர பாக்கியம் கிட்டும்.
    • குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும்

    கடன் அகலும், வறுமை நீங்கும், பயம் அடியோடு ஓடும், கவலைகள் நீங்கும், திருமணத் தடை அகலும்,

    நாகதோஷம், பில்லி, சூனியம் விலகும், தொழில் மேன்மை உண்டாகும்.

    குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும், பாயில் மற்றும் படுக்கையில் சிறுநீர் கழிவது நிற்கும்.

    புத்திர பாக்கியம் கிட்டும்,  வேண்டுவது எல்லாம் கிடைத்து உன்னத நிலை அடைவீர்கள்.

    வெளித் தொடர்புகள், நட்பின் மேன்மை உண்டாகும். வேண்டுவன அனைத்தும் பெற்று வெற்றியாளராக உலாவருவீர்கள்.

    எனவே சர்வ வல்லமை படைத்த ஆஞ்சநேயரை தரிசித்து நலம் பெறுங்கள்

    • அனுமன் வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதற்கு சமமாகும்.
    • ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக மற்றொரு ஐதிகம் உள்ளது.

    ராமனுக்கு உதவி செய்ய வேண்டும் என சிவபெருமான் நினைத்தார்.

    இதனால் சிவபெருமானே ஆஞ்சநேய உருவம் எடுத்தார்.

    அப்போது பார்வதி தேவி நீங்கள் மட்டும் தனியாக போகக்கூடாது.

    என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். நான் உங்களை விட்டு எப்படிப் பிரிந்திருப்பேன் என்றார்.

    உடனே சிவபெருமான் அப்படியானால் "நீ எனது வாலினுள் புகுந்துவா" என்றார்.

    அதன்படி அனுமானுடைய வாலாக பார்வதி தேவி உருப்பெற்றார்.

    ஆகவேதான் அனுமான் வாலில் சக்தி ரூபம் மறைந்து இருப்பதால் அனுமன் வாலை கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்கள் வணங்கி மண வாழ்க்கை பெறப் பிரார்த்திக்கின்றார்கள்.

    அனுமன் வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதற்கு சமமாகும்.

    ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக மற்றொரு ஐதிகம் உள்ளது.

    ஆதலால் ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் பொட்டிட்டு ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை செய்து வணங்கி வருவது நவக்கிரங்களை ஒரு சேர வணங்குவதற்கு ஒப்பாகும்.

    • ஒரு வடை சாப்பிட்டால் ஒருநாள் முழுவதும் உணவு உட்கொள்ள வேண்டாம். களைப்பில்லாமல் இருக்கலாம்.
    • உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது.

    உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது.

    ராம கைங்கரியத்திலேயே சதா ஈடுபாடுடன் இருந்து வருபவரும் ஓயாமல் உழைத்து வருபவரமான ஆஞ்சநேயருக்கு உணவருந்தவே அவகாசம் கிடைக்கவில்லை.

    ஆதலால் அனுமானின் தாய் அஞ்சனாதேவி தன் மகனுக்கு வடை ஒன்றை அளித்து அவரது களைப்பைப் போக்கினாள்.

    ஒரு வடை சாப்பிட்டால் ஒருநாள் முழுவதும் உணவு உட்கொள்ள வேண்டாம். களைப்பில்லாமல் இருக்கலாம்.

    ஆகவேதான் வடைமாலை சாத்தும் கைங்கரியம் செய்யப்படுகிறது.

    அனுமார் ராவணப் படையுடன் செய்த போர்களில் உடல் முழுவதும் துளைகள் உண்டாகி விட்டன.

    ஆனால் துளைகளை அனுமாரின் மருத்துவ சக்தியினால் குணம் அடைய செய்து விட்டார்.

    ஆகவே துளை போட்ட வடைகளை மாலையாக்கி வடைமாலை சாத்துகிறோம் என்றொரு ஐதீகம் உள்ளது.

    • வெண்ணை உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து விட்டார்.
    • அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.

    ராவணன் சம்ஹாரத்திற்கு பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.

    அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.

    அப்போது அவர்களை சம்ஹாரம் பண்ணக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமன் கடவுளே அதற்குத் தகுதியானவர் என்று முடிவு பண்ணி அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

    அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவருக்கு உரிய ஆயுதங்களை ஆசிர்வாதம் பண்ணி அளித்தார்கள்.

    ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் மற்ற கடவுள்களும் சக்தி வாய்ந்த மற்ற ஆயுதங்களையும் அளித்தார்கள்.

    ஸ்ரீ கண்ணபெருமான் வெண்ணை அளித்து "இந்த வெண்ணை உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடலாம்" என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

    அதன்படி அனுமன் கையில் ஆசீர்வாதமாக அளிக்கப்பட்ட வெண்ணை உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து விட்டார்.

    ஆகவே அதேபோல நாம் வெண்ணை சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணை உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

    • இனிப்புடன் 16 வகைக் காய்கறிகளுடன் வடை, அப்பளம், பாயசம் என்று உணவு வழங்கப்படுகிறது.
    • சிலர் அந்த இலைகளைத் தலைமேல் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.

    முசிறியை அடுத்த காட்டுப்புத்தூர் அருகில் உள்ள நாகையநல்லூர் என்னும் திருத்தலத்தில் கொண்டாடப்படும் ஸ்ரீராமநவமி உற்சவம் சற்று வித்தியாசமானது.

    விழாவை முன்னிட்டு தினமும் உபன்யாசம், நடிப்புடன் கூடிய கதா காலட்சேபம் ஆகியவை சிறப்புற நடைபெறும்.

    இந்த விழாவின் கடைசி நாள் அன்று சீதா ராம திருக்கல்யாணம் நடைபெறும்.

    அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்படும்.

    இந்த விருந்தில் கலந்து கொண்டாலே நம் பாவங்கள் நசிந்து புண்ணியம் சேரும் என்கிறார்கள்.

    தார்சாலையில் சுமார் 200 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும் கொண்ட பந்தலின் கீழ் எவ்விதத் தரை விரிப்பும் இன்றி பக்தர்கள் வரிசையாக அமர்ந்து கொள்வார்கள்.

    அனைவருக்கும் தலைவாழை இலை போடப்படும்.

    இனிப்புடன் 16 வகைக் காய்கறிகளுடன் வடை, அப்பளம், பாயசம் என்று உணவு வழங்கப்படுகிறது.

    அத்துடன் விருந்து உண்ணும் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் தட்சணை வழங்குகிறார்கள்.

    விருந்து சாப்பிட்டதும் இலையை மூடக்கூடாது.

    அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் சிலர் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக அந்த இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள்.

    சிலர் அந்த இலைகளைத் தலைமேல் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.

    இத்திருமண வைபவத்தில் ஸ்ரீஆஞ்சநேயருடன் முனிவர்கள், தேவர்கள் ஆகியோர் மானசீகமாக விருந்தில் கலந்து கொண்டு அடியார்களாக சாப்பிட்டிருப்பார்கள் என்பது நம்பிக்கை.

    அதனால் அவர்கள் சாப்பிட்ட இலைகளில் குறிப்பாக அனுமனும் சாப்பிட்டிருப்பதால் அந்த இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள்.

    இதனால் ராமனின் திருவருள் எளிதில் கிட்டும் என்பது ஐதீகம்.

    • ஆறடி உயரத்தில் கருங்கற்சிலையாக கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார்
    • அன்றைய தினம் லாபம் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை

    கோபி அருகே கூகலூர் ஆஞ்சநேயரை மகப்பேறு இல்லாதவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவரை வழிபட்டு நற்பலனை பெறுகிறார்கள்.

    ஆறடி உயரத்தில் கருங்கற்சிலையாக கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார் அனுமன்.

    உடல்நலம் சரியில்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் இங்கே வந்து, வடைமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் நலம் பெறுவர் என்பதும் தன்னம்பிக்கையாக இருக்கிறது.

    சுற்று வட்டாரத்தில் இருக்கும் வியாபாரிகள் பலர், தினமும் கடை திறப்புக்கு முன் கடைச்சாவியை இவரது திருவடியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.

    அப்படி செய்தால் அன்றைய தினம் லாபம் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    • திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று.
    • இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    திருச்செந்தூர் கடல் பகுதியில் இருந்து தென் இலங்கை மிக அருகாமையில் அமைந்துள்ளது.

    திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று.

    இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டால் சேதுசமுத்திர திட்டம் எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவேறும் என்ற கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் எடுத்து கூறப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்துக்கு அருகாமையில் அமைந்திருப்பது வட இலங்கை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் விளக்கம் ஆகும்.

    காரிய சித்தி ஆஞ்சநேயர்

    உன்னதமான இந்தப் படத்தை பூஜா மண்டபத்தில் வைத்திருந்தாலே சகல தோஷங்களும் விலகி, சத்ருபயம் நீங்கி சகல சம்பத்தும், ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது சாஸ்திர விதி.

    • நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம், வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.
    • நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம், வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.

    முத்தங்கி, வெண்ணை காப்பு, சந்தன காப்பு அலங்காரமும், புஷ்ப அங்கி அலங்காரமும் செய்யப்படுகிறது.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவித்து அவரை தரிசனம் செய்தால், லட்சுமி அருள் கிடைக்கும்.

    வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு ஏற்படும்.

    சங்கடங்கள் நீங்கும்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் அணிவித்து அவரை தரிசனம் செய்தால், மனதில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

    மனக்குழப்பம் தீரும். அறிவாற்றல் பெருகி மகிழ்ச்சி ஏற்படும்.

    திருமணம் கைகூடும்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அணிவித்து அவரை தரிசனம் செய்தால், நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    அதேபோல், நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

    நோய்களைத் தீர்க்கும் வெண்ணைகாப்பு

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், நோய்கள் நீங்கும்.

    சந்தனக்காப்பு அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், லட்சுமியின் அருள் கிட்டும்.

    புஷ்ப அங்கி அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், மனதில் நினைத்தவை விரைவில் நிறைவேறும்.

    3 மாதங்களுக்கு மட்டுமே வெண்ணை காப்பு

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு குளிர் காலத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    எல்லா நாட்களிலும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    வடைமாலை

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் வடைமாலை சாற்றப்படுகிறது.

    பொது அபிசேகமும் நடத்தப்படுகிறது.

    அமாவாசை நாட்களில் சிறப்பு அபிசேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    • உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர்.
    • ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும்.

    அனுமன் மந்திரம் வருமாறு:

    ஓம் ஜம் ஹரீம், ஹனுமதே ராமதூதாய

    லங்கா வித்வம்ஸனாய: அஞ்ஜனா கர்ப்ப ஸ்ம்பூதாய,

    ஸாகினீடாகினீவித்வப்ஸனாய, கிலகிய பூபூ காரினே

    விபீக்ஷணாய, ஹனுமத் தேவாய, ஓம் ஐம்

    ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹீரீம் ஹ்ரும் பட் ஸ்வாஹா

    அனுமன் மந்திரத்தின் பொருள் வருமாறு:

    செயற்கரிய செயல்புரியும் என் சுவாமியே(ஆஞ்சநேயரே), உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர்.

    ஸ்ரீ ராமதூதரும் கருணைக் கடலும் ஆகிய ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும்.

    ×