search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை பிரதிஷ்டை"

    • செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, பாலாபிஷேகம், யாகபூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
    • அதன் பின்னர் பல்வேறு புனித தீர்த்தங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்மாள்புரம் மலைக்கிராமத்தில் செல்வ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, பாலாபிஷேகம், யாகபூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    அதன் பின்னர் பல்வேறு புனித தீர்த்தங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் வருசநாடு, சிங்கராஜபுரம், பூசனூத்து ,அம்பேத்கர் காலனி, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர். பிரதிஷ்டையில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கிராம கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார். இதில் கடமலை மயிலை தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, க.மயிலாடும்பாறை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×