என் மலர்
முகப்பு » குடும்ப செலவு
நீங்கள் தேடியது "குடும்ப செலவு"
- மகாலட்சுமியிடம் குடும்ப செலவிற்காக கொடுக்கும் பணத்தை வீணாக செலவு செய்வதாக கண்டித்துள்ளார்.
- இதுகுறித்து பாலு வரஞ்சரம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வானவரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பாலு (37). இவருக்கும் மகாலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்று2 குழந்தைகள் உள்ளனர். பாலு தனது மனைவி மகாலட்சுமியிடம் குடும்ப செலவிற்காக கொடுக்கும் பணத்தை வீணாக செலவு செய்வதாக கண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாலு வெளியே சென்று விட்டு பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது மனைவி மற்றும் மகன், மகளை அக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலு வரஞ்சரம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 3 பேரையும் தேடி வருகின்றனர்.
×
X