search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஸ்ட்ரோஜன்"

    • இதயத்துக்கென தனியே மின்சார செயல்பாடு உள்ளது.
    • மூளை செயலிழப்பு ஏற்பட்டாலும் இதயத்துடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு முதலில் உருவாகுவது இதயம்தான். 20 வயது வரை இதயம் தொடர்ந்து வளர்ச்சி அடையும். இதயத்துக்கென தனியே மின்சார செயல்பாடு உள்ளது. மூளை செயலிழப்பு ஏற்பட்டாலும் இதயத்துடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

    மேலும், இதயத்துடிப்புக்கான சக்தியை இதயமே உற்பத்தி செய்து கொள்ளும். இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறையும், வாழ்நாளில் சராசரியாக 2.5 பில்லின் முறையும் துடிக்கிறது. மேலும், நமது வாழ்நாள் முழுவதும் சுமார் 117.34 லிட்டர் ரத்தத்தை இதயம் 'பம்ப்' செய்கிறது.

    இடது கையின் நடுவிரலின் கீழ்ப்பகுதி மற்றும் வலது கை மணிக்கட்டு பகுதியில் இதயத்துக்கான புள்ளிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட அழுத்தம் கொடுப்பதன் மூலம் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.

    பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிரோஜெஸ்டிரோன் ஹார்மோன் இதய நோயிலிருந்து உடலை பாதுகாக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பானது பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் வரை செயல்படும். ஆண்களை விட பெண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 8 முறை அதிகமாக இதயம் துடிக்கிறது.

    நாம் தும்மும் போது ஒரு வினாடி கண்கள் தன்னிச்சையாக மூடுவதுடன், இதயத் துடிப்பில் சிறிய மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. நம் சுவாசம் சீரானவுடன் மீண்டும் இதயம் சீராக துடிக்க ஆரம்பிக்கும். இதயத்துடிப்பானது மாரடைப்பு ஏற்படும் போது மட்டுமே நின்றுபோகும்.

    நாம் அதிக அளவு உணர்ச்சி வசப்படும்போதும், மன அழுத்தத்தில் இருக்கும்போதும் இதயம் முழுமையாக சுருங்கும். அதேபோல் அதீத மகிழ்ச்சி மற்றும் சிரிக்கும்போது வழக்கத்தைவிட இதயம் 20 சதவிகிதம் அதிகமாக ரத்தத்தை 'பம்ப்' செய்யும்.

    ரத்த அழுத்தம். கொலஸ்ட்ரால் அளவுகள், உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தான் இதயத்துக்கான வயது கணக்கிடப்படுகிறது. இதயத்துக்கான வயதைப் பொறுத்தே அதன் ஆரோக்கியம் மதிப்பிடப்படுகிறது. இதயத்தின் வயது நம்முடைய உண்மையான வயதைவிட குறைவாக இருக்கலாம்.

    பொதுவாக காலை வேளையில் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவை அதிகமாக ஏற்படும். மற்ற நேரங்களை விட காலை வேளையில் மன அழுத்தத்துக்கான ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். வாரத்தின் மற்ற நாட்களை விட திங்கட்கிழமை காலை வேளையில் அதிகமானோருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    இது தவிர, பூனை, நாய் மற்றும் குதிரை ஆகிய விலங்குகள் மனிதனின் இதயத்துடிப்பை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் உணர்வு ரீதியான பதிலை வெளிப்படுத்தும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன

    ×