என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை பல்கலைக் கழகம்"
- தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம் பழமையான, பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது.
- பல்கலைக் கழகத்தில் 750 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 226 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம் பழமையான, பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. இப்பல்கலைக் கழகத்தில் 750 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 226 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
மேலும் பல்கலைக்கழக ஊழியர்கள் 1,400 பேர் பணிபுரியும் இடத்தில் 600 பேர் மட்டுமே உள்ளனர். தனிச் சிறப்புடன் விளங்கும் சென்னை பல்கலைக்கழகம் மேலும் தொடர்ந்து சிறப்புடன் நடைபெறவும், சிறந்த கல்வியை போதிக்கவும், தேவையான பேராசிரியர்களையும், பணியாளர்களையும் நியமிக்கவும், போதிய நிதியை ஒதுக்கி, சென்னை பல்கலைக் கழத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தொலை நிலை கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் முதல் கட்ட விசாரணை நடத்தி அதன் அறிக்கையை சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் கவுரியிடம் தாக்கல் செய்தார்.
- சம்பந்தப்பட்ட தேர்வர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் துணை வேந்தர் கவுரி உத்தரவிட்டார்.
சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அப்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. அரியர் உள்பட அனைத்து தேர்வுகளையும் வீட்டில் இருந்தே எழுத அனுமதி அளிக்கப்பட்டது.
சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைநிலை கல்வி பிரிவு நடத்திய இந்த தேர்வில் சிலர் பல்கலைக் கழகத்தில் சேராமலேயே கடைசி நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்து வீட்டில் இருந்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தியது. அப்போது 116 பேர் பல்கலைக்கழக படிப்பில் சேராமல் தேர்வுக்கு மட்டும் விண்ணப்பித்து பட்டம் வாங்க முயன்றதும், பல்கலைக் கழகத்தின் அதிகாரிகள் சிலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்ச்சி பெறுவது வரை உதவி இருப்பதும் உறுதியானது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் பி.காம், பி.பி.ஏ. பட்டங்களை பெற முயன்றுள்ளனர். இதில் மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு அவர்கள் ரூ.3 லட்சம் வரை லஞ்சம் கொடுத்திருப்பதும் தெரியவந்தது. ஆனால் அவர்களுக்கான கல்வி கட்டணம் ரூ.20 ஆயிரம் மட்டுமே ஆகும்.
இதுகுறித்து தொலை நிலை கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் முதல் கட்ட விசாரணை நடத்தி அதன் அறிக்கையை சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் கவுரியிடம் தாக்கல் செய்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்வர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் துணை வேந்தர் கவுரி உத்தரவிட்டார். இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தின் சட்டப்படிப்புகள் துறை இயக்குனர் சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் தேர்வர்கள், சேர்க்கை மையத்தினர், பல்கலைக்கழக ஊழியர்கள் தேர்வுத் துறையினரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது 116 பேர் போலி மாணவர்களாக தேர்வு எழுதி 'ஆல் பாஸ்' முறையில் பட்டம் பெற முயன்றதும், பல்கலைக்கழக ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இதற்கு உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த மோசடியில் தொடர்புடைய 2 உதவி பதிவாளர்கள் உள்பட 5 பேரை சஸ்பெண்டு செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்தது. இதற்கு சிண்டிகேட் குழுவும் ஒப்புதல் அளித்தது.
இதன் அடிப்படையில் உதவி பதிவாளர்கள் தமிழ்வாணன், மோகன் குமார், உதவி பிரிவு அதிகாரிகள் எழிலரசி, சாந்தகுமார், உதவியாளர் ஜான் வெஸ்லின் ஆகிய 5 பேரை சஸ்பெண்டு செய்து துணை வேந்தர் கவுரி உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
- 5 ஆண்டுகளாக கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படாத நிலையில் இப்போது ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
- ஆகஸ்டு முதல் வாரத்துக்குள் அனைத்து கலைக்கல்லூரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கலை அறிவியல் கல்லூரிகளிலும் போதுமான கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? பேராசிரியர்கள் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை கண்டறிந்து அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 130 கலை அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் எண்ணிக்கை சரியாக உள்ளதா? என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
5 ஆண்டுகளாக கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படாத நிலையில் இப்போது ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் ஆகஸ்டு முதல் வாரத்துக்குள் அனைத்து கலைக்கல்லூரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
ஆய்வுக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி திட்டத்தில் தமிழ் பேசுவதற்கான பாட வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை சாராத பிற மாநிலத்தவர்கள் தமிழ் பேசுவதற்கு வசதியாக இப்பாடத்திட்டத்தை செயல்படுத்த பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.
சான்றிதழ் படிப்பாக இதனை செயல்படுத்த பல்கலைக்கழக திட்டமிட்டுள்ளது. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் தெரியாமல் வங்கிகள் மற்றும் பிற அலுவலகங்களில் பணியாற்றுவதால் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். அதனை நிவர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தேசிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் தமிழ் பேச முடியாமல் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள முடியாமல் சேவை ஆற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கு தமிழ் பேசுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற வங்கிகள் தரப்பில் கொடுத்த வேண்டுகோளை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தொலைதூரக் கல்வி இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தொலை தூரக்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், தமிழ் பேசுவதற்கான பாடத்திட்டம் எளிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் 15 பிரிவுகளாக பிரித்து நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவு வகுப்பும் 1½ மணி நேரம் நடக்கும். ஆன்லைன் வழியாக நடத்தப்படும் இந்த வகுப்பு வார இறுதியில் நடத்தப்படும். பல்கலைக்கழகத்தில் உள்ள திறன் உள்ள பேராசிரியர்கள் மூலம் தமிழ் மொழி பேசுவதற்கு பயிற்சி வழங்கப்படும் என்றார்.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி கூறியதாவது:-
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வை எளிதாக கையாளும் வகையில் மாணவர்களுக்கு அடிப்படையான ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
2-வது நாளான நேற்றும் 2 புதிய போட்டி சாதனைகள் படைக்கப்பட்டன. பெண்களுக்கான வட்டு எறிதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங் கனை காருண்யா 43.50 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதில் கடந்த ஆண்டு (2017) எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை நித்யா 40.88 மீட்டர் எறிந்ததே சாதனையாக இருந்தது. இதேபோல் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.ஓ.பி. வைஷ்ணவா வீராங்கனை ஸ்ரீஜா 11.7 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 2001-ம் ஆண்டில் ஜே.பி.ஏ.எஸ். வீராங்கனை கே.என்.பிரியா 11.9 வினாடியில் கடந்து படைத்து இருந்த சாதனையை ஸ்ரீஜா நேற்று தகர்த்தார். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நிதின் (ஆர்.கே.எம்.விவேகானந்தா) 10.4 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து, 2008-ம் ஆண்டில் எம்.சி.சி. வீரர் பிரசாத் (10.4 வினாடி) படைத்து இருந்த சாதனையை சமன் செய்தார்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் அஜித் குமார், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ராஜேஷ் (இருவரும் டி.ஜி.வைஷ்ணவா), ஈட்டி எறிதலில் அருண்குமார், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரி கிருஷ்ணன் (இருவரும் எம்.சி.சி.) ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
பெண்களுக்கான குண்டு எறிதலில் மீனாட்சி, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கனிமொழி (இருவரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எக்னேஷ், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மரிய ராசாத்தி (இருவரும் எத்திராஜ்), ஈட்டி எறிதலில் ஹேமமாலினி (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) ஆகியோர் தங்கப்பதக்கத்தை பெற்றனர். நேற்றைய பந்தயங்கள் முடிவில் ஆண்கள் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியும், பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியும் பதக்க வேட்டையில் முன்னிலை வகிக்கின்றன. இன்று கடைசி நாள் பந்தயம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. மத்திய அமலாக்கத்துறை உதவி இயக்குனர் டெர்ரான்ஸ் ரோட்ரிஜோ போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.ஐஸ்வர்யாவும், உயரம் தாண்டுதலில் வினோதாவும், டிரிபிள் ஜம்ப்பில் ஆர்.ஐஸ்வர்யாவும், 5 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் லாவண்யாவும் (4 பேரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 400 மீட்டர் தடை ஓட்டத்தில் திவ்யாவும் (அண்ணா ஆதர்ஷ்), 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுஷ்மிதாவும் (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) முதலிடம் பிடித்தனர்.
ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜய் தர்மாவும், போல்வால்ட்டில் சந்தோஷ்குமாரும், டிரிபிள்ஜம்ப்பில் அரவிந்தும், 20 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் வெற்றிவேலும் (4 பேரும் டி.ஜி.வைஷ்ணவா), சங்கிலி குண்டு எறிதலில் முரளிதரனும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கெவின் குமார் ராஜூம் (2 பேரும் லயோலா) தங்கம் வென்றனர். #UniversityofMadras #AthleticChampionship
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிதலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பி.துரைசாமி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
அவரிடம் நிருபர்கள், கடந்த காலங்களில் துணை வேந்தர்கள் நியமனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் கை மாறியுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் எழுப்பியுள்ள புகார் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து துணை வேந்தர் துரைசாமி கூறியதாவது:-
தகுதி அடிப்படையில் தான் துணை வேந்தர் நியமனம் நடைபெற்று வருகிறது. அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவ் இருக்கும் போது தான் நான் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டேன்.
அதாவது துணை வேந்தர் பதவிக்கான நேர்முகத்தேர்வில் 3 பேர் பங்கேற்றோம். இதில் விதிமுறைகளின் படி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தான் இப்பதவி கிடைக்கப்பெற்றேன். இதில் எவ்வித பணப்பரிமாற்றமோ, சிபாரிசுகளோ நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 160ம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது, தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் தான் என்றும், 6 குடியரசுத் தலைவர்களையும், பல முதல்வர்களையும், நோபல் பரிசாளர்களையும் சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், புத்தகங்களை தூக்க வேண்டிய கைகளில் மாணவர்கள் ஆயுதங்களை தூக்கி செல்வது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார். வன்முறைகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும், அதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கேட்டுக்கொண்ட அவர், மாணவர்கள் இதைத்தான் படிக்க வேண்டும் என பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

முன்னதாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘மனது சோர்வடையாமல் தொடர்ந்து முயற்சி செய்து நமக்கு முன்னால் இருப்பவர்களை கடந்து சென்றால் வரலாறு படைக்க முடியும்’ என்றார். #EdappadiPalaniswami #MadrasUniversity