என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாய்வுத் தொல்லை"

    • சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவில் தான் வாயு இருக்கும்.
    • தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

    வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிற்றில் அழுத்தம், வீக்கம் என்பது பொதுவான ஒரு இரைப்பை குடல் நோய் அறிகுறியாகும். வயிற்றில் உள்ள அமிலச் சுரப்பு அதிகரிக்கும் போது குடலில் உள்ள வாய்வுவின் அழுத்தமும் அதிகரித்து வாய்வுப் பிரச்சனை, வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது.


    காரணங்கள்:

    உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம்.

    குடலில் உணவு செரிக்கும் போது, அங்கு இயல்பாகவே இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்களை நிகழ்த்தும் போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் உற்பத்தியாகின்றன.


    தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது.

    சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவில் தான் வாயு இருக்கும். இவை ஏப்பம் மூலமாக வாய் வழியாக அல்லது ஆசனவாய் வழியாக வெளியேறி விடும். சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது.

    ஆனால் குடலில் 'பெப்சின்' போன்ற என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டன் போன்ற வாயுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.


    பொதுவாக வயிற்றிலுள்ள ஹைட்ரஜனும், மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் சத்தமே இல்லாமல் வாயு வெளியேறும். ஆனால் இந்த கலவை அதிகமாகிவிட்டால் பக்கத்தில் உள்ளவர்கள் அதிரும் படியான சத்தம் கேட்கும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.

    தீர்வுகள்:

    மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு எடுப்பது நல்லது.

    தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சீரகம் உடலின் அக உறுப்புகளை சீராக்கி, உடலைப் பலப்படுத்தும். சீரகத் தண்ணீர் தினமும் காலை, மாலை வேளைகளில் இளஞ்சூட்டில் குடித்து வந்தால் வாயுப் பிரச்சினை குறையும்.

    சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்து, தேவையானபோது சுடு சோற்றில் உப்பு சேர்த்து நெய் விட்டு சாப்பிட வாயுப் பிரச்சினை நீங்கும். மோரில் வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம்.

    வயிற்றுப் பொருமலுக்கு ஓமத் தண்ணீர் ஒரு அருமருந்து, பெரியவர்கள் 5-10 மி.லி. சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.

    பழைய சாதத்தில் சின்ன வெங்காயம், இஞ்சித் துண்டு, மோர், கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கு, நன்மை பயக்கும் பாக்டீரியாக்களான லேக்டோபேசில்லஸ், பிபிடோபாக்டீரியா, சக்காரோமைசஸ் இவைகள் சீரான அளவில் குடலில் இருந்து ஏராளமான நன்மைகள் செய்யும்.

    தண்ணீரை அண்ணாந்து குடிக்காமல் உதட்டில் வைத்து குடிக்க வேண்டும். உணவை அவசரப்படாமல் நன்கு மென்று சாப்பிட வேண்டும். காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவு கடுக்காய் இவைகளை முறையாக எடுத்து வந்தால் செரிமான மண்டல பிரச்சினைகள் சீராகி, வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் நீங்கும், மலச்சிக்கல் இராது.

    • அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.
    • உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

    நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை நம்முடைய செல்களுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும் செயல்பாட்டிற்குப் பெயர் தான் மெட்டபாலிசம். இந்த வளர்சிதை மாற்றம் சரியாக இருந்தால் தான் உடலின் ஜீரண உறுப்புகள் சரியாகி இயங்கி உடல் எடை அதிகரிக்காமல் தடுப்பது முதல் உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைப்பது என பல்வேறு வேலைகளை உடலால் சரியாக செய்ய முடியும்.

    மெட்டபாலிசம் அதிகரிக்கும் பானம்

    தேவையான பொருள்கள்

    இஞ்சி - ஒரு துண்டு

    சீரகப் பொடி - கால் ஸ்பூன் (வறுத்து அரைத்தது),

    எலுமிச்சை பழம் - பாதி அளவு

    கல் உப்பு - சிறிதளவு

    செய்முறை

    இஞ்சியை மண் இல்லாமல் நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு, அதன் மேல் தோலை சீவி எடுத்து விடுங்கள். பின்பு அதை துருவிக் கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அதில் துருவிய இஞ்சி, சீரகப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.

    இந்த கலந்து வைத்திருக்கும் கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து வெதுவெதுபடபான நீரில் கலந்தால் பானம் தயார்.

    பயன்படுத்தும் முறை

    இந்த பானத்தை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு எடுத்துக்கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மேலே சொன்ன கலவையை ஒரு வாரத்திற்கு ஏற்றபடி தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது வெந்நீரில் கலந்து குடித்துக் கொள்ளலாம்.

    பயன்கள்

    * இந்த பானத்தை தினமும் குடிப்பதால் ஜீரண ஆற்றல் மேம்படும்.

    * அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.

    * உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

    * உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

    ×