என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பான் மசாலா"

    • குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன்.

    உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 26-ந்தேதி காலையில் திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக நேற்று மாலை அவளது குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் விசாரணை நடத்தியபோது சிறுமி அவளது பக்கத்து வீட்டுக்கு சென்றதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து பக்கத்தை வீட்டைச் சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் சிறுமியை கொலை செய்ததாக கூறினார். சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன். சிறுமி சிப்ஸ் வாங்கி வந்து தின்றாள். இதனால் ஆத்திரத்தில் சிறுமியை அடித்து கொலை செய்தேன் என்றான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். அவனது சகோதரர்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 2013ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகத்திற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது.

    2013ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தரபிரதேச சட்டமனறத்தில் இருந்த எச்சில் கறைகளை கண்டு சபாநாயகர் அதிர்ச்சியடைந்தார்.
    • எச்சில் கறைகளை சுத்தம் செய்யவேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார்.

    உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் பான் மசாலாவை மென்று எச்சில் துப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சட்டமன்றத்தில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா, எச்சில் கறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து,

    எச்சில் கறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் சதீஷ் மஹானா அறிவுறுத்தினார்.

    மேலும், இந்த செயலை செய்த எம்.எல்.ஏ. தாமாக முன் வந்து செயலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

    2017 ஆம் ஆண்டு பணியின்போது அதிகாரிகள் பான் மசாலா போன்ற பொருட்களை மெல்லக் கூடாது என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பான் மசாலாவின் ஒவ்வொரு தானியமும் குங்குமப்பூவின் சக்தியைக் கொண்டுள்ளது என்று விளம்பரப்படுத்தினர்.
    • "குங்குமப்பூ தடவிய குட்கா" என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் விளம்பரம் மூலம் ஈர்க்கப்படுகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையம், பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    விமல் பான் மசாலாவை தயாரிக்கும் ஜேபி இண்டஸ்ட்ரீஸின் தலைவர் விமல் குமார் அகர்வாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஜெய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திர சிங் பதியால் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அவரின் புகாரில், மேற்கூறிய நடிகர்கள் நடித்த பான் மசாலா விளம்பரங்களில், " தானே தானே மெய்ன் ஹை கேசர் கா தம் (பான் மசாலாவின் ஒவ்வொரு தானியமும் குங்குமப்பூவின் சக்தியைக் கொண்டுள்ளது)" என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, ஜேபி இண்டஸ்ட்ரீஸ் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வருகிறது. பொது மக்கள் தொடர்ந்து பான் மசாலாவை அதிகம் உட்கொள்கிறார்கள்.

    "குங்குமப்பூ தடவிய குட்கா" என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் விளம்பரம் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் பான் மசாலா ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை வரவழைக்கிறது.

    எனவே மக்களை தவறாக வழிநடத்திய நிறுவனம் மீதும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையம் தற்போது சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கும் நடிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனைத்து நடிகர்களும், பான் மசாலா தயாரிப்பு நிறுவனமும் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.

    ×