என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கைலாசம்"
- இத்தீர்த்தத்தில் மூழ்கி விரதம் இயற்றி பேறு பல பெற்றவர்கள் பலராவர்.
- இச்சங்குதீர்த்தம், மூழ்குவோரின் உளப்பிணியையும் உடற்பிணியையும் போக்கி வருகிறது.
சங்கு தீர்த்தம் ஆழ்ந்து அகன்றதாகவும் மழை வளம் குறைந்த காலத்தும் வற்றாத நீரூற்றை உடையதாகவும் உள்ளது.
வருவாய் வழிகள் அடைபட்ட இக்காலத்தும் வடபால் எப்போதும் தெளிந்த நீரையுடையது.
முற்காலத்தில் சம்புலிங்கம் என்கிற பெயரையுடைய பிரம்மச்சாரி பிராமணன் ஒருவன், ஒரு குருவை அடைந்து யோக நூல்கள் பயின்று வந்தான்.
அந்தக் குருவானவர் காலா காலங்களில் செய்ய வேண்டிய நித்திய நியமங்களைச் செய்யாதவராய், எப்பொழுதும் உறங்கிக் கொண்டிருந்தார்.
இதனைக்கண்ட சம்புலிங்கம் அவர் செயல்கள் தனக்கு வருத்தம் தந்ததால்,
அக்குருவை அணுகி அவர் தவறுகளைக் கூறி, அவரிடமிருந்து விலகிச் செல்வதாகக் கூறினான்.
குருவானவர் சம்புலிங்கத்தை குருவைக் கண்டித்த நீ சித்தப்பிரமை கொண்டு அலையக் கடவாயாக என்று சாபமிட்டார்.
அதனால், சம்புலிங்கம் சித்தப்பிரமை அடைந்து பல இடங்களில் அலைந்து இவ்வேதகிரியை அடைந்தான்.
சங்குதீர்த்தத்தில் அதன் மகிமை அறியாமலேயே மூழ்கினான்.
அவன் சித்தப்பிரமை நீங்கி தெளிவு பெற்றான்.
அவன் நாள்தோறும் சங்கு தீர்த்தத்தில் மூழ்கி மலை வலம் வந்து, இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவன் சங்கு தீர்த்தத்தில் மூழ்கி படியில் அமர்ந்து இறைவனைத் துதித்துக் கொண்டிருக்கையில்,
அத்தடாகத்தின் மீது பெரிய பறவையொன்று ஒரு கெண்டை மீனைத் தன் வாயில் வைத்த வண்ணம் பறந்து வந்தது.
அப்பறவை வாயில் இருந்த மீன் பறவையின் வாயிலிருந்து நழுவி தடாகத்தில் விழுந்துவிட்டது.
தடாகத்தில் விழுந்த மீன் ஒரு யட்சனாக (கந்தருவனாக) உருமாறி வெளிவந்தான்.
விண்ணில் கந்தருவர்கள் புட்பக விமானத்துடன் நின்றிருந்தனர்.
இந்த அதிசயத்தைக் கண்ட சம்புலிங்கம் அந்த யட்சனை அணுகி அவன் வரலாறு பற்றி வினவினான்
யட்சன், "நான் கயிலையில் உள்ள பெரிய தடாகத்தில் காமகளியாட்டத்தில் இருந்தேன்.
அங்கு வந்த நந்திதேவரை நான், மதிக்காமல் என் விளையாட்டிலேயே இருந்துவிட்டேன், நந்திதேவர் கோபித்து என்னைப் பார்த்து நீ தம்மை மதியாது நீரில் காம மயக்கத்தில் இருந்ததால் மீன் உருவமாகி நீரில் கிடப்பாயாக என்று சாபமிட்டார்.
நான் பயந்து அவரை வணங்கி சாப விமோசனம் கேட்டேன்.
நந்தி தேவர் ஆயிரம் ஆண்டுகள் நீ மீனாக இத்தடாகத்தில் வசித்த பிறகு ஒரு பறவை உன்னைக் கவ்விக் செல்லும்.
அப்பறவை தேகிரியில் உள்ள தடாகத்தின் மீது செல்லும் போது நீ அதன் வாயினின்றும் நழுவித் தடாகத்தில் விழுவாய்.
அப்போது உன் சாபம் தீர்ந்து நீ யட்ச உருவடைவாய்.
உன்னை கந்தருவர்கள் அழைத்துச் செல்வார்கள்" என்று அருள் செய்தார் என்று கூறி, கந்தவருடன் புட்பக விமானம் ஏறி வானுலகம் சென்றான்.
சம்புலிங்கம் அத்தடாகத்தின் மகிமையை உணர்ந்து நாள் தோறும் அதில் மூழ்கி, மலை வலம் வந்து தவமியற்றி முத்தி அடைந்தான்.
சங்கு தீர்த்தத்தில் மூழ்குவோர் சித்தப் பிரமை நீங்கி தெளிவடைதல் யாவரும் அறிந்த உண்மை.
இத்தீர்த்தத்தில் மூழ்கி விரதம் இயற்றி பேறு பல பெற்றவர்கள் பலராவர்.
சிவபெருமான் இத்தலத்தில் தீர்த்தம் வேறு, சிவம் வேறு என்று இரண்டில்லை., இவை (இரண்டும்) ஒன்றே என்கிறார்.
சங்குதீர்த்தத்தில் பிறக்கும் சங்குகளால் கார்த்திகைத் திங்களில் கடைசி திங்கட்கிழமையில் வேதகிரிப்பெருமானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
வடநாட்டு யாத்திரீகர்கள் இத்தலத்தில் உள்ள இத்தீர்த்தத்தில் நீராடுவதற்காகவே வருகிறார்கள்.
அவர்கள் இத்தலத்தை தீர்த்ததலம், பட்சிதீர்த்தம் என்று குறிப்பிடுகின்றனர்.
வடநாட்டு யாத்திரீகர்கள் கங்கை, பட்சிதீர்த்தம், இராமேசுவரம் சேது இந்த மூன்றில்தான் நீராடுவர்.
அவர்கள் நீராடும், மூழ்கும் இடங்களில் ஒன்று நதி, ஒன்று குளம், ஒன்று கடல்.
பாரத நாட்டிலுள்ள குளங்களில் இது ஒன்று தான் தீர்த்தம் என்று அவர்கள் மூழ்குகிறார்கள்.
இன்றும் நாள்தோறும் சில நூறு யாத்திரீகர்கள் இத்தலத்திற்கு வந்து, சங்கு தீர்த்தத்தில் நீராடி மலை ஏறி வேதகிரி ஈசனையும், கழுகுகளையும் தரிசித்துச் செல்கின்றனர்.
இச்சங்குதீர்த்தம், மூழ்குவோரின் உளப்பிணியையும் உடற்பிணியையும் போக்கி வருகிறது.
- இறைவனை சிவசிவ என அழைத்து அனைத்து ஜீவன்களும் சிவனருள் பெற வேண்டுகிறேன்.
- இறைவன் சூரியனாகவும், சந்திரனாகவும், விளங்கி உலகுக்கு ஒளியைக் கொடுப்பவர்.
இறைவன் சூரியனாகவும், சந்திரனாகவும், நட்சத்திரங்களாகவும் விளங்கி உலகுக்கு ஒளியைக் கொடுப்பவர்.
அவர் பேரொளி மயமானவர்.
"அருள்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி" என்கிறார் வள்ளலார் பெருமான்.
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீப விழாவும், 'சொக்கப்பனை' ஏற்றி வழிபடுவதும் இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உணர்த்துகிறது.
"இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே!"
என்று திருநாவுக்கரசர் இறைவனைப் போற்றுகிறார்.
ஒரு தீபத்திலிருந்து பல தீபங்கள் ஏற்றி ரத தீபம், நட்சத்திர தீபம் என்று ஏற்றி, இறைவனுக்கு தீப ஆராதனை செய்வதும்,
சபரிமலையில் மகரஜோதி வழிபாடு செய்வதும் இறைவனின் ஒளிவடிவை நமக்கு உணர்த்துகின்றன.
தீபஒளி திருநாள் என்றால், தீபங்களின் வரிசை என்று பொருளாகும்.
லட்சதீப விழாவின் மாலைப்பொழுதில் திருக்கழுக்குன்றத்து கோவில், குளம் மற்றும் மாடவீதிகள் மட்டுமின்றி ஊர் முழுவதும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால்,
புற இருளும் நீங்கும், அக இருளும் நீங்கும், ஞானம் உண்டாகும் என்பது மக்களிடையே நிலவி வருகின்ற அசையா நம்பிக்கை ஆகும்.
எல்லோரும் எல்லாமும் பெற்று வாழவும், ஒற்றுமை உணர்வுடன் வாழவும் உலகமே நலம் பெற வேண்டும், வளம்பெற வேண்டும் என வேண்டி,
இறைவனை சிவசிவ என அழைத்து அனைத்து ஜீவன்களும் சிவனருள் பெற வேண்டுகிறேன்.
கழுக்குன்றத்துக் கடவுளை வணங்கினால் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வேண்டிய பொருள் செல்வங்கள் கிடைக்கும்.
வாழ்ந்து முடித்த பின் மறுமைக்கு வேண்டிய அருள் செல்வமும் கிடைக்கும்.
எனவே, சொர்க்கப்பதி என்னும் வீடுபேற்றை அடைந்து உய்யலாம்.
எனவே, இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்த பின் இறுதியிலே பரம்பொருளாம் இறைவனைப் பற்றிப் பிடிப்போம்.
இறையருள் பெறுவோம். வீடுபேறு அடைவோம்.
அந்த பலனை பெற அனைவரும் நாளை திருக்கழுக்குன்றம் வாருங்கள்.
- சங்கு தீர்த்த புஷ்கரம் என்பது தீர்த்தங்களுக்கு உரிய ஒரு புண்ணிய காலமாகும்.
- இந்தத் திருத்தலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் முக்கியமானவை.
திருக்கழுக்குன்றம் தலத்துக்குரிய நதி பாலாறு. இதனை குகநதி, ஷீரநதி என்றும் அழைப்பர்.
நம் பாரத பூமியின் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும்
சங்கு தீர்த்தம் என்னும் புனிதக் குளத்திலே சங்கமித்து உள்ளன.
இந்தத் திருத்தலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் முக்கியமானவை.
அவை, இந்திர தீர்த்தம், சம்புதீர்த்தம், ருத்ரகோடி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம், மெய்ஞ்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம், அகலிகை தீர்த்தம், சம்பாதி தீர்த்தம் என்பனவாகும்.
இந்தப் பன்னிரண்டு தீத்தங்களின் தலையாயதாய் சிறப்பின் மணிமகுடமாய் உலக மக்களால் போற்றப்படுவதுமான
நன்னீரை உடைய சங்கு தீர்த்தம் என்னும் பெரிய தடாகம் அமைந்துள்ளது.
இதன் நடுவில் நீராழி மண்டபம் அமைந்துள்ளது.
இதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறப்பதால் இது சங்கு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
மார்க்கண்டேய முனிவர் இங்கு இறைவனை வேண்டி சங்கு பெற்றார்.
அது முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது.
சங்கு தீர்த்த புஷ்கரமேளா என்பது குருபகவான் கன்னி ராசியில் வரும்நாளே இத்திருநாளாகும்.
இவ்வேளையில் மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் சங்கு தீர்த்த குளத்துக்குள் வந்து சங்கமிக்கின்றன என்பது ஐதீகம்.
அப்போது இறைவனுக்கு தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும்.
பக்தர்களும் நீராடி இறையருள் பெறுவர்.
சங்கு தீர்த்த புஷ்கரம் என்பது தீர்த்தங்களுக்கு உரிய ஒரு புண்ணிய காலமாகும்.
அக்காலத்தில் நீராடுதல் சிறப்பாகும்.
- திருக்குடமுழுக்கு விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்வதாகும்.
- சங்குதீர்த்த புஷ்கரமேளா நிகழ்வும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடத்தப்படுகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தின் இதயமாய் விளங்கும் திருக்கழுக்குன்றத்தில் மிகவும் அரியதான விழா
எல்லோரும் அறிந்த விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் லட்சதீபப் பெருவிழா.
திருக்குடமுழுக்கு விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்வதாகும்.
குறிஞ்சி மலர் மலர்வதும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஆகும்.
வட இந்தியாவில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவும் தென்னிந்தியாவில் நிகழும் கும்பகோணம் மகாமகம் திருவிழாவும்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஆகும்.
திரு ஓங்கும் புண்ணியச் செயல் ஓங்கும் திருக்கழுக்குன்றத்தில் நடைபெறும் சங்குதீர்த்த புஷ்கரமேளா நிகழ்வும்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடத்தப்படுகிறது.
- திருக்கழுக்குன்றம் தலத்தில் மலையை சூழ்ந்து 12 தீர்த்தங்கள் இருக்கின்றன
- தாழக்கோயிலில் நந்திதேவர் தவம் செய்த இடத்தில் நந்தி தீர்த்தம் இருக்கிறது.
திருக்கழுக்குன்றம் தலத்தில் மலையை சூழ்ந்து 12 தீர்த்தங்கள் இருக்கின்றன
1. இந்திர தீர்த்தம்
2. சம்பு தீர்த்தம்,
3. உருத்திர தீர்த்தம்
4. வசிட்ட தீர்த்தம்
5. மெய்ஞ்ஞான தீர்த்தம்
6. அகத்திய தீர்த்தம்
7. மார்க்கண்ட தீர்த்தம்
8. கோசிக தீர்த்தம்
9. நந்தி தீர்த்தம்
10. வருண தீர்த்தம்
11. அகலிகை தீர்த்தம்
12. பட்சி தீர்த்தம்
தாழக்கோயிலில் நந்திதேவர் தவம் செய்த இடத்தில் நந்தி தீர்த்தம் இருக்கிறது.
நால்வர் ஆலயத்தின் பின்புறம் இந்திர தீர்த்தம் இருக்கிறது.
மலைமீது கழுகுகள் அமுதுண்ணும் இடம் அருகே இருப்பது பட்சி தீர்த்தம்.
பட்சிதீர்த்தம் பூடா, விருத்தாவெனும் இரு முனிவர்கள் சாரூபப் பதவி வேண்டி தவம் செய்து
இறைவன் தரிசனம் தந்தபோது மாறாக சாயுச்சியப் பதவி வேண்டி இறைவன் தந்த வரத்தை மறுத்ததனால்
சம்பு, ஆதி எனும் கழுகுகளாய்ப் பிறந்து இம்மலையில் அவர்கள் மூக்கினால் உண்டாக்கப் பெற்ற தீர்த்தமாகும்.
சுரகுரு சக்கரவர்த்தியின் அமைச்சனும், வேட்டை நாயும் இதில் மூழ்கி வெண்குஷ்டநோய் நீங்கப் பெற்றனர்.
வடநாட்டு யாத்திரீகர்கள் இந்த பட்சி தீர்த்தப் பெயரையே இத்தலத்திற்கு வழங்கி வழிபட்டு வருகின்றனர்.
- திருக்கழுக்குன்றம் தலத்தில் விநாயகர் கோவில்கள் திருப்பிய திசையெல்லாம் நிரம்ப உள்ளன.
- கிரிவல பாதையில் மேலும் ஒரு விநாயகர் ஆலயம் கட்டுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
திருக்கழுக்குன்றம் தலத்தில் விநாயகர் கோவில்கள் திருப்பிய திசையெல்லாம் நிரம்ப உள்ளன.
அந்த விநாயகர்கள் விவரம் வருமாறு
1. அன்னகாவடி விநாயகர்
2. இரட்டை விநாயகர்
3. அரசடி விநாயகர்
4. சித்தார்த்த விநாயகர்
5. வண்டுவன விநாயகர்
6. சித்திபுத்தி சமேத சுந்தரமூர்த்தி விநாயகர்
7. வன்னியடி விநாயகர்
8. சுந்தர விநாயகர்
9. வலம்புரி விநாயகர்
10. வல்லபை விநாயகர்
11. வேத விநாயகர்
12. லட்சுமி விநாயகர்
கிரிவல பாதையில் மேலும் ஒரு விநாயகர் ஆலயம் கட்டுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
- இத்தலத்திலிருந்து 9km தொலைவில் பல்லவரின் துறைமுக பட்டினமாகிய மகாபலிபுரம் உள்ளது.
- மலை மீது ஏறிச் செல்வதற்கு வசதியாகப் படிகட்டுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள பழமைமிக்க சிவதலங்களுள் திருக்கழுக்குன்றம் தலமும் ஒன்று.
இத்தலம் சென்னையில் இருந்து 45 மைல் தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 9 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
இத்தலத்திலிருந்து ஒன்பது 9 தொலைவில் பல்லவரின் துறைமுக பட்டினமாகிய மகாபலிபுரம் உள்ளது.
கழுகு குன்றம் என்பது கழுக்குன்றம் என்று இப்போது மருவி அழைக்கப்பட்டு வருகின்றது.
கழுகுகள் இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம் இது.
இதன் காரணமாகவே இத்தலத்திற்கு இப்பெயர் அமைந்தது.
இதன் காரணமாக இத்தலத்திற்கு பட்சி தலம் என்னும் பெயரும் உண்டு.
மற்றும் இத்தலத்திற்கு உலகளந்த சோழபுரம், வேதகிரி, தட்சிண கைலாசம், ருத்திராகோடி என்னும் பெயர்களும் உண்டு.
கழுகுகள் இத்தலத்தில் இறைவனைப் பூசித்துப் பேறுபெற்ற உண்மையை இன்றும் அடிக்கடி நேரில் கண்டு அறியலாம்.
இரண்டு கழுகுகள் ஒவ்வொரு நாளும் பகல் 11 மணிக்குள் இத்தலத்து மலையின் கோபுரத்தை சுற்றிவந்து செல்வதை பார்க்க முடியும்.
இக்காட்சியை இத்தலத்திலன்றி வேறு எத்தலத்திலும் காண இயலாது.
வடநாட்டை சேர்ந்தவர்கள் இத்தலத்தைப் பட்சி தீர்த்தம் என்று கூறிப் போற்றி வழிபட்டு வருகின்றனர்.
இத்தலத்து மலை மீது ஏறிச் செல்வதற்கு வசதியாகப் படிகட்டுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்