என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரஷிய விண்வெளி ஆய்வு மையம்"
- பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- மாணவ-மாணவிகளுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.
சென்னை:
விஞ்ஞானி சிவதாணுபிள்ளை அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ஆன்லைன் மூலமாக ஏவுதள அறிவியல் பயிற்சி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந்தேதி தொடங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 300 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு 4-வது கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 6 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் 4 மாணவர்களுக்கு ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட நிதியுதவி கிடைக்க பெற்ற நிலையில் 2 மாணவர்களுக்கு நிதி இல்லாததால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டபோது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ரூபாய் 4 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட முதல் கட்டமாக 50 மாணவ-மாணவிகள் 10 ஆசிரியர்கள் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.
மாணவ-மாணவிகளுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் பல்லாவரம் மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.