search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது மூயிஸ்"

    • சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார்
    • மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கும் - மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது

    பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அமைச்சரின் ட்வீட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் "லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது" என பதிவிட்டிருந்தார்.

    மேலும், லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரம்மிப்பில் இருக்கிறேன். அகத்தி, பயங்காரம், கரவட்டி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறுகிறேன் என தெரிவித்திருந்தார்.

    பிரதமரின் இந்த பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும் என கூறியுள்ளார்.

    இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடாக மாலத்தீவு உள்ளது. இந்த நிலையில், மாலத்தீவு அமைச்சரின் இந்த பதிவின் மூலம் இந்தியாவுக்கும் - மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாலத்தீவு அதிபராக  முகமது மூயிஸ் பதவியேற்ற பிறகு, இந்திய ராணுவத்தை வெளியேற்ற உறுதியளித்தது குறிப்பிடதக்கது. 

    • மாலத்தீவு அதிபர் தேர்தலில் 53 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வென்றார்.
    • பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பங்கேற்றார்.

    மாலே:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் யாருக்கும் கிடைக்கவில்லை.

    இதனால் மீண்டும் தேர்தல் நடந்தது. இதில் 53 சதவீத ஓட்டுகள் பெற்று மூயிஸ் வென்றதாக கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. எதிர்த்துப் போட்டியிட்ட சோலிஹ் 46 சதவீத ஓட்டுகளைப் பெற்றார்.

    இதற்கிடையே, நவம்பர் 17-ம் தேதி மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்க உள்ளார். இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், மாலத்தீவின் 8-வது அதிபராக முகமது மூயிஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீப் பதவியேற்றுக் கொண்டார்.

    அப்போது பேசிய அதிபர் முகமது மூயிஸ், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பேன். மாலத்தீவில் எந்தவொரு வெளிநாட்டு ராணுவத்துக்கும் இடம் அளிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்தப் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்பட தெற்காசிய தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார்.

    • அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.
    • 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார்.

    மாலத்தீவு:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராக அறியப்படும் அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.

    கடந்த 9-ந்தேதி அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை. அந்நாட்டை பொறுத்தவரை அதிபராக 50 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும்.

    இதையடுத்து இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 85 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார். அதிபர் முகமது சோலி தோல்வியை தழுவினார். அவர் தான் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மூயிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 61 வயதான முகமது சோலி நவம்பர் மாதம் 17-ந்தேதி வரை புதிய அதிபர் பதவியேற்கும் வரை தற்காலிக அதிபராக பதவி வகிப்பார்.

    சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட முகமது மூயிஸ் மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

    ஏனென்றால் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அதிபர் சோலி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். தனது ஆட்சியில் இந்தியாவுக்கு அளவுக்கு அதிகமாக இடமளிப்பதாகவும், மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.

    மேலும் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய ராணுவத்தினரை மாலத்தீவில் இருந்து திருப்பி அனுப்பப் போவதாக அறிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டை அதிபர் முகமது சோலி மறுத்தார். மாலத்தீவில் நடந்து வரும் கட்டமைப்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் வந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.

    ×