என் மலர்
நீங்கள் தேடியது "ஒரே நாடு ஒரே கல்வி"
- நாடு முழுக்க ஒரே கல்விமுறைக்கு சாத்தியமில்லை என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்து உள்ளது.
- குழந்தைகள் பள்ளிக்கு வெளியில் உள்ள சமூக வாழ்க்கையை நெருக்கமாக புரிந்து கொள்ளலாம்.
நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவரக் கோரும் மனுவிற்கு சி.பி.எஸ்.இ. எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவருவதற்கு ஒரே நாடு, ஒரே கல்விமுறை எனும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு பா.ஜ.க. தலைவர் அஸ்வினி உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவிற்கு பதில் அளித்த சி.பி.எஸ்.இ. நாடு முழுக்க ஒரே கல்விமுறைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்து உள்ளது. இதோடு, "நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவரும் போது, அதில் உள்ளூர் மொழி, கலாசாரம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை. தற்போதைய கல்விமுறையில் உள்ளூர் நெறிமுறைகள், கலாசாரம் மற்றும் உள்ளூர் வளங்கள் பற்றிய நெகிழ்வுத்தன்மை கொண்ட தேசிய கட்டமைப்பு பயன்பாட்டில் உள்ளது."
"இதுபோன்ற பாடத்திட்டத்துடன் குழந்தைகள் பள்ளிக்கு வெளியில் உள்ள சமூக வாழ்க்கையை நெருக்கமாக புரிந்து கொள்ள முடியும். இதனால் பொதுப்படையான ஒன்றைவிட வேறுப்பட்ட பின்னணி கொண்ட பாடத்திட்டம் சரியான ஒன்றாக இருக்காது," என்று தெரிவித்து உள்ளது.