search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி மாதம் சிறப்புகள்"

    • பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர்.
    • அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை அதை அழகுற அணிவித்து அழகாக்குவர்.

    "ஆடி" என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஓர் அசுரனின் பெயர்.

    நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உருவத்தைப் பெறும் ஆற்றல் கொண்டவன்.

    சிவபெருமான், தம் நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை அழித்தார்.

    சிவனையடையும் பக்தி ஞானம் அவனுக்கிருந்த காரணத்தால் அன்னை உமாதேவி மனமிரங்கி அவன் நினைவாக மாதங்களில் ஒன்றை "ஆடி" என்று அழைத்தாள்.

    அதுவே அன்னைக்கு ஆராதனை செய்யும் மாதமாக அமைந்தது.

    வழிபடுவது எப்படி?

    உலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு எம்மைக் காத்திட வேண்டி அவள் அருள் பெற,

    ஆடி மாதம் பிறந்ததும் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை பிடித்து அவித்து அம்மனுக்கு படைப்பார்கள்.

    அம்மன் கோவில்கள் எங்கும் கூழ்காய்ச்சி ஊற்றுவார்கள்.

    காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த அந்த முத்துமாரி அம்மன் மனது வைக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவர்.

    வேப்பிலைமாலை சாற்றுதலும் எலுமிச்சைக்கனி மாலை சாற்றி வெப்பு நோய் தீர்க்க வழிபடுவதும் காலகாலமாய் நடைபெற்று வரும் வழக்கமாகும்.

    எலுமிச்சைசாறு, கரும்பு, இளநீர், பால், தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அம்மனை குளிரச்செய்வர்.

    பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர்.

    அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை அதை அழகுற அணிவித்து அழகாக்குவர்.

    தயிர்சாதம், எலுமிச்சைசாதம், கூழ் கஞ்சி போன்றவைகள படையல் இட்டு அன்னபூரணி எமக்கு என்றும் குறைவில்லாத வாழ்வை வளமுடன் தந்திட நிவேதனம் செய்து,

    பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து படைத்து தூபம் தீபம் காட்டி பூச்சொரிந்து பூமலர்களால் அர்ச்சித்து வழிபாடாற்றுவர்.

    • மகாபலியின் கர்வத்தை அடக்க திரிவிக்ரமனாகத் தோன்றினார் மகாவிஷ்ணு.
    • பின்னர் யோகினி ஏகாதசி அன்று விரதமிருந்து நோயிலிருந்து மீண்டான்.

    ஆடி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை "யோகினி ஏகாதசி' என்றும், வளர்பிறை ஏகாதசியை "சயினி ஏகாதசி' என்றும் குறிப்பிடுவர்.

    குபேரனுக்கு புஷ்பம் கொடுக்கும் ஹேமமாலி என்பவன் தன் மனைவி மீது கொண்ட காதலால் தனது பணியை மறந்து போனான்.

    அதனால் குபேரனின் சாபத்திற்கு ஆளாகி குஷ்ட நோயால் அவதிப்பட்டான்.

    பின்னர் யோகினி ஏகாதசி அன்று விரதமிருந்து நோயிலிருந்து மீண்டான்.

    இதுவே யோகினி ஏகாதசியின் சிறப்பு.

    மகாபலியின் கர்வத்தை அடக்க திரிவிக்ரமனாகத் தோன்றினார் மகாவிஷ்ணு.

    மகாபலியை அடக்கி பாதாளத்திற்கு அனுப்பிவிட்டு திருப்பாற்கடலுக்குச் சென்றவர் ஆடி மாத வளர்பிறை ஏகாதசியில் பாம்பணையில் சயனித்தார்.

    எனவே இது சயினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் சயினி ஏகாதசியை "ஆஷாட ஏகாதசி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

    பாலையும், தயிரையும் காவடி போல் தோளில் சுமந்து கொண்டு, "பாண்டு ரங்க விட்டலா, பண்டரி நாதா விட்டலா" என்றும் ""விட்டல் விட்டல் ஜெய் ஜெய் விட்டல்" என்றும் கோஷமிட்டுக் கொண்டு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனை தரிசிப்பார்கள்.

    • ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள்.
    • ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர்.

    ஆடி அமாவாசை

    ஆடி அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது விசேஷம்.

    இந்நன்னாளில் சுமங்கலி பூஜையும் செய்கின்றனர்.

    ஆடி கிருத்திகை

    ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள்.

    அவரது ஜென்ம நட்சத்திரமும் ஆயிற்றே! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து, தண்டபாணியை வணங்குவர்.

    ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர்.

    ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர்.

    அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

    இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த ஆடி மாதத்தில், இறைவழிபாட்டில் தோய்ந்து தெய்வ நிந்தனை பெறுவோம்.

    • ஆடி மாதத்தில் ஜீவ நதிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன
    • காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடிப் பதினெட்டு கொண்டாடப்படுகிறது.

    திருச்சி அருகேயுள்ள நெடுங்களநாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது படும்.

    இச்சமயத்தில் சூரிய பூஜை வெகு விமர்சையாக நடைபெறும்.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் "ஆடி முளை கொட்டு விழா' பத்து நாட்கள் சிறப்பாக அரங்கேறும்.

    ஆடி மாதத்தில் ஜீவ நதிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதை "ஜலப்பிரவாக பூஜை' என்று கூறுவதுண்டு.

    இறைவனின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடி உழவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஊட்டும் நாள் இந்நாள்.

    இதன் அடிப்படையில் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடிப் பதினெட்டு கொண்டாடப்படுகிறது.

    "ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப இம்மாதத்தில்தான் விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளைத் துவக்குகிறார்கள்.

    திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணமாவதற்காக அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்ளும் வைபவமும் நடக்கும்.

    • காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்
    • அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.

    ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் "ஆடிப்பூரம்` என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம்.

    ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது,

    நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள்.

    காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.

    ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும்,

    மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

    உலக மாதாவாகிய பார்வதி தேவி ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது.

    அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.

    • அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள்.
    • ஆடிப் பௌர்ணமி அன்று ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது.

    திருநெல்வேலி காந்திமதியம்மை ஆடித்தபசு, குரு பூர்ணிமா என்ற குரு பூஜை, ஹயக்ரீவ அவதார தினம் ஆகியவை இந்த நாளில் அமைகின்றன.

    ஈசன் தன் உடலின் ஒரு பாகத்தை உமைக்குக் கொடுத்து காட்சி அளித்த கோலம் அர்த்தநாரி உருவம் (திருச்செங்கோட்டு மூலவர்).

    ஈசன் தன் உடலின் ஒரு பாகத்தை விஷ்ணுவுக்குக் கொடுத்து காட்சி தந்த திருக்கோலம் சங்கர நாராயணர் கோலம் (திருநெல்வேலி).

    ஆடித் தபசு விழா திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் ஒன்று.

    அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள்.

    அதற்கு ஈசன் பொதிகை மலை புன்னை வனத்தில் தவம் புரியக் கூறினார்.

    அம்மையும் ஊசிமுனையில் நின்று தவமியற்ற, இறைவன் ஆடிப் பவுர்ணமி உத்திராட நட்சத்திரத்தில்

    பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் ஒரு பாகனாக காட்சியளித்தார்.

    ஆடி மாதம் இங்கு நடைபெறும் 12 நாள் திருவிழாவில் 11ஆம் நாள் திருவிழாதான் ஆடித் தபசு.

    இந்த ஆடிப் பவுர்ணமி அன்று திருச்சி அருகேயுள்ள உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியது.

    அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர்.

    காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.

    ஆடிப் பௌர்ணமி அன்று ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது.

    இவர் கல்விக்குரிய கடவுள்.

    இவர் வழிபாடு தொன்மையானது.

    இவரின் திருவுருவை புதுவை முத்தியால் பேட்டை ஆலயத்திலும் கடலூர் அருகே திருவஹீந்திரபுரத்திலும் காணலாம்.

    படிக்கும் மாணவர்கள் புத்தகம், பேனா வைத்து வணங்குகின்றனர்.

    • இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
    • காவடி எடுத்தல், தீமிதி, கூழ் ஊற்றுதல் என்று ஊரே அமர்க்களப்படும்.

    தெய்வீகப்பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம்.

    அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது.

    பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம்.

    பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.

    சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

    இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும்.

    காவடி எடுத்தல், தீமிதி, கூழ் ஊற்றுதல் என்று ஊரே அமர்க்களப்படும்.

    படவேடு ரேணுகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன்

    போன்ற பல திருத்தலங்களில் திருவிழாக்கள் அரங்கேறும்.

    ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும்.

    • உலக உயிர்களை தன் கடைக்கண்ணால் காத்து கரையேற்றுகின்றாள்.
    • ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வடிவழகு கொண்டு விளங்குகிறாள்.

    அம்பிகை ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வடிவழகு கொண்டு வெவ்வேறு திருநாமங்களில் வழங்கப்படுகிறாள்.

    மகாசக்தி உமையவளே,

    மாரியாக,

    காளியாக,

    சங்கரியாக,

    துர்க்கையாக,

    முத்தாரம்மனாக,

    இசக்கியம்மையாக

    கொலு வீற்றிருந்து உலக உயிர்களை தன் கடைக்கண்ணால் காத்து கரையேற்றுகின்றாள்.

    அவளை வணங்கும் போது,

    "தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா

    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா

    இனம் தரும், நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!''

    என்று ஆடிசெவ்வாய், ஆடி வெள்ளிகளில் பாடி மகிழ்வோமே!

    • “பரா’ என்றால் அளவிட முடியாதது என்பது பொருள்.
    • அளவிடவே முடியாத சக்தியின் இருப்பிடமாகத் திகழ்வதால் அம்பிகை பராசக்தி எனப்பட்டாள்.

    ஆடி மாதத்தில் அம்பிகை வழிபாட்டை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

    அவள் பராசக்தியாக விளங்குகிறாள்.

    பராசக்தி என்பதற்குரிய விளக்கத்தையும் நாம் தெரிந்து கொண்டாக வேண்டுமே! படிப்போமா!

    ஆதியில் ஒளி தோன்றியது. அந்த ஒளியில் ஆதிசக்தி தோன்றினாள்.

    படைக்கும் கடவுளாக பிரம்மனையும், காக்கும் கடவுளாக விஷ்ணுவையும், அழிக்கும் கடவுளாக சிவனையும் படைத்தவள் சக்தியே.

    அந்த ஆதிசக்தியே கல்விக்குரிய கலைமகளாக, செல்வத்திற்குரிய அலைமகளாக, வீரத்திற் குரிய மலைமகளாகவும் ஆட்சி செய்கிறாள்.

    தாய்க்கெல்லாம் தாயாக இருக்கும் இந்த சக்தி உயர்ந்தவள் என்பதாலேயே, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை முதன்மையாக வைத்தார்கள்.

    அன்னையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை என்னும் வழக்கும் இதனால் தான் உண்டானது.

    இந்த ஆதிசக்தியை பராசக்தி என்றும் வழங்குவர்.

    "பரா' என்றால் அளவிட முடியாதது என்பது பொருள்.

    அளவிடவே முடியாத சக்தியின் இருப்பிடமாகத் திகழ்வதால் அம்பிகை பராசக்தி எனப்பட்டாள்.

    இவளே ஆலயங்களில் அருள் செய்கிறாள்.

    • அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும்.
    • பின்னர், இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. இருமல், தொற்றுநோய் வராது.

    மாரியம்மன் கோவில்களில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளியன்று கஞ்சி வைத்து வணங்குவார்கள்.

    இதை எப்படி வைப்பதென தெரிந்து கொள்ளுங்கள்.

    "ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்' எனும்போது, தூசு பறப்பது எம்மாத்திரம்? இதனால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும்.

    இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் கஞ்சி வைக்கிறார்கள்.

    இதை "ஆடிக்கஞ்சி' என்பர்.

    அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்

    ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

    இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும்.

    பின்னர், இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. இருமல், தொற்றுநோய் வராது.

    கோவில் நிர்வாகங்கள் இதற்குரிய ஏற்பாட்டை செய்யலாம்.

    • அங்கு இந்த அப்பத்தை “கனகப்பொடி’ என்கின்றனர்.
    • தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் “பி’ உள்ளது.

    ஆடி வெள்ளியன்று தவிட்டு அப்பம் செய்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம்.

    தவிடை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.

    இதை சப்பாத்தியை விட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க ("நான்' எனப்படும் எண்ணெய் இல்லாத காய்ந்த ரொட்டி சுடுவது போல) வேண்டும்.

    தீக்கனல் இல்லாவிட்டால், "நான்ஸ்டிக்' தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம்.

    ஆடிவெள்ளியன்று காலையில் காபி, டீ கூட சாப்பிடாமல் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு,

    இந்த பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும்.

    கேரளாவில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது.

    அங்கு இந்த அப்பத்தை "கனகப்பொடி' என்கின்றனர்.

    தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் "பி' உள்ளது.

    வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு.

    ஆடி மாதத்தில் இந்த சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யம் செய்து,

    அம்பாளின் அருள் கடாட்சமும் பெற்று சாப்பிடலாம்.

    ×