என் மலர்
நீங்கள் தேடியது "புதுப்பித்தல்"
- ரூ.2.லட்சம் வரை கல்விஉதவித்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
- விண்ணப்பங்களை 15.1.2024-க்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும் .
கள்ளக்குறிச்சி, அக்.4-
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறு வனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.லட்சம் வரை கல்விஉதவித்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப் பட்டு வருகிறது. மேலும், கல்வி உதவித் தொகைக்கு 2023-2024-ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் பிற்படுத்த ப்பட்ட நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப் பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவல கத்தை அணு கியோ அல்லது இணைய தள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மர பினர் மாணவர்கள் 2023-2024-ம் நிதி யாண்டிற்கான புதியது மற்றும் புதப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்விநிறு வனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதி யான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து, ஆணை யர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு 15.12.2023 -க்குள்ளும் புதியது விண்ணப்பங்களை 15.1.2024-க்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறி உள்ளார்.