என் மலர்
நீங்கள் தேடியது "அதிகாரிகளின் குழு ஆய்வு"
- கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை
- ஊருக்குள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க முடியும்
அரக்கோணம்:-
அரக்கோணத்தில் 1865-ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் ரெயில்வேயால் கட்டப்பட்ட சுரங்கப்பாதை உள்ளது.
இது தற்போது வரை வலிமையாக உள்ளது. இந்த பாதையில் கார்கள், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் பைக்குகள் போன்றவை மட்டுமே செல்ல முடியும்.
மேலும் நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைப்பதாக உள்ளதால் குடியிருப்பு வாசிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.
தற்போது இந்த மழைநீர் வடிகால் உள்ளிட்ட சுரங்கப்பாதையில், பொதுமக்கள், வியாபாரிகள், குப்பைகளை கொட்டுவதால் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
நீர் தேங்குவதை தடுக்க சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே அதிகாரிகளின் குழு ஆய்வு நடத்தியது.
அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு சீரமைப்பு பணி தொடங்கும் என தெரிவித்தனர்.
பணியின் ஒரு பகுதியாக, குறுகிய மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படுகின்றன. மேலும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் வாய்க்கால்களும் சுத்தம் செய்யப்படும். சுரங்கப்பாதையில் உள்ள 700 மீட்டர் வடிகால் நீர்ப்பாசனத் தொட்டியுடன் இணைக்கப்படுகிறது.
சுரங்கப்பாதை மற்றும் தொட்டிக்கு இடையே உள்ள முழு வடிகால் பாதையும் அதன் பாதையில் உள்ள புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்படுகிறது.
வரும் வாரத்தில் பணிகள் நிறைவடையும்.மேலும் ரெயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு கருதி சுரங்கப்பாதையில் இருக்கும் வடிகால் அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள முடியாது. மேலும் சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் அமைக்கப்படும் என்றனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பாசன தொட்டியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் , சுரங்கப்பாதையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பது சவாலாக உள்ளது. இந்த தொட்டியை தூர்வாரினால், மழைக்காலங்களில் அதிக மழைநீரை சேமித்து, ஊருக்குள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்றனர்.