search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு"

    • எண்ணெய் கிணறு உள்ள பகுதியை சுற்றி சின்னகுறுவாடி, பெரியகுடி, அம்பத்தார் குளமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
    • உடனடியாக ஓஎன்ஜிசி துறை அதிகாரிகள் கேஸ் வெளியேறும் பகுதியினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் ஊராட்சி காரியமங்கலம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்.

    இந்த கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் பணிகள் நிறைவடைந்தால் அந்த 2 எண்ணெய் கிணறுகளும் மூடப்பட்டது. இந்த எண்ணெய் கிணறு உள்ள பகுதியை சுற்றி சின்னகுறுவாடி, பெரியகுடி, அம்பத்தார் குளமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அதில் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை காரியமங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் எண்ணெய் கிணறு உள்ள பகுதி வழியாக நடந்து சென்றனர். அப்போது அங்கு கியாஸ் வாசனை வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் எண்ணெய் கிணறு அருகே சென்று பார்த்த போது மூடப்பட்ட எண்ணை கிணற்றிலிருந்து அதிகளவில் கேஸ் வெளியேறி வருவது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓஎன்ஜிசி துறை அதிகாரிகள் கேஸ் வெளியேறும் பகுதியினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    ×