search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகுப்போட்டி"

    • ஆடிஷனில் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் 50 பேர் இரண்டாம் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதியாக 32 பேர் தேர்வாகினர்.
    • அழகுப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக ராப்பர், பாடகர் ஐக்கி பெர்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ரேடிசன் ப்ளூ ஜிஆர்டி நட்சத்திர விடுதியில் 12ம் ஆண்டு பேஸ் ஆப் சென்னை 2023 அழகுப் போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், ஐரிஸ் பேஸ் ஆப் சென்னை 2023 அழகுப் போட்டியில் 18 வயது முதல் 28 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல், 50 வயதிற்கு உட்பட்ட திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், திருமணமான பெண்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த அழகு போட்டியில் 14 ஆண்கள் மற்றும் திருமணமான பெண்கள் பிரிவில் 7 பேரும், இளம் பெண்கள் பிரிவில் 11 பேரும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக 500 பேர் பேஸ் ஆப் சென்னை 2023 நிகழ்ச்சிக்காக நடைபெற்ற ஆடிஷனில் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் 50 பேர் இரண்டாம் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதியாக 32 பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைவரும் ஒய்யாரமாக நடைபோட்டனர். இவர்கள் அனைவரும் ராம்ப்வாக், ஸ்டைலிங், கம்யூனிகேஷன் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இவர்களில், சிறப்பாக செயல்பட்ட திருமணமான பெண்கள் பிரிவில் திருமதி ஐரின் பேஸ் ஆப் சென்னை பட்டத்தை துருத்தினா, இளம்பெண்கள் பிரிவில் மிஸ் ஐரிஸ் பேஸ் ஆப் சென்னை பட்டத்தை நிஹாரிகா, ஆண்கள் பிரிவில் மிஸ்டர் ஐரிஸ் பேஸ் ஆப் சென்னை பட்டத்தை மணிகண்டன் உள்ளிட்டோர் ஐரிஸ் பேஸ் ஆப் சென்னை 2023 ஆண்டின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    இந்த அழகுப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக ராப்பர், பாடகர் ஐக்கி பெர்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×