என் மலர்
நீங்கள் தேடியது "விழிப்புணர்வு வாகனம்"
- சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் மனித ஆரோக்கியம் மேம்படுகிறது.
- பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது
காங்கயம் :
தற்சமயம் அரிசி உணவே பிரதானமாக உள்ளது. இதனால், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை.
அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு சத்துக்கள் கொண்ட சோளம், கம்பு, ராகி, திணை, வாலி ,சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரை போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் மனித ஆரோக்கியம் மேம்படுகிறது. எனவே சோளம், கம்பு, ராகி, திணை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரை வாலி பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.
அதன்படி காங்கயம் வட்டாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலிருந்து சிறுதானிய உற்பத்தி மற்றும் மானிய திட்டங்கள் குறித்தான விழிப்புணர்வு வாகனத்தை காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ஜீவிதா ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் காங்கயம் வட்டார நகர செயலாளர் சேமலையப்பன், காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தாமணி, வேளாண்மை அலுவலர். ரேவதி,துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார், அப்துல்ரஹ்மான், ஜோதிஸ்வரன், கல்யாணராஜன், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வசந்தமுருகன் , தேவராஜ், தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் சிந்தியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.