என் மலர்
நீங்கள் தேடியது "வாட்டல் நாகராஜ்"
- தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.
- வாட்டல் நாகராஜை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
காவிரியில் உரிய தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் , கர்நாடகாவில் போராட்டத்தை தூண்டி விடும் பா.ஜ.க. மற்றும் கன்னட அமைப்பு நிர்வாகிகளை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.
பின்னர் அவர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் உருவப்படம் அடங்கிய பேனருக்கு மலர் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது பேனர் முன்பு நின்று ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாட்டல் நாகராஜை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நூதன போராட்டத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.