என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு மருத்துவர்"
- இந்த அரசாணை சேவை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
- அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் பறிபோவதை தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்பைக் கொண்டு பொது சுகாதாரத் துறையில் தமிழகம் வலுவாக இருப்பதற்கு பேருதவி புரிபவர்கள் அரசு மருத்துவர்கள். அப்பேற்பட்ட சேவை மருத்துவர்களின் மருத்துவக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் இந்த "திடீர் அரசாணை" அவர்களுக்கு பேரதிர்ச்சி அளிப்பதோடு, இது சமூக நீதிக்கே எதிரானது.
தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குறிப்பாக புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் (மருத்துவம் அல்லாத சிறப்பு பிரிவு, காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, தோல் சிகிச்சை பிரிவு, மனநலம் சிகிச்சை பிரிவு) தேவை உள்ள நிலையில் இந்த அரசாணை சேவை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
ஆகவே, அரசு மருத்துவமனைகளில் சேவை புரிந்து வரும் மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான 50% இடஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்த அரசாணையை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டுமென்றும், அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் பறிபோவதை தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- சுய விவரங்கள் அனைத்தும் மறந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.
- அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது.
சென்னை:
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் எ.தேரணிராஜன் கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரோஜா (80). இவர் கடந்த மாதம் 11-ந்தேதி தலையில் காயத்துடன் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மயங்கி கிடந்தததாகத் தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார். சுய விவரங்கள் அனைத்தும் மறந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்துக்கு தையல் போடப்பட்டு சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அவரது முகவரி, குடும்பத்தினர், சொந்த ஊர் எதுவுமே அவருக்கு நினைவில் இல்லை.
அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது.
அதற்கு மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டு வந்த போது திடீரென ஒரு நாள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சைகள் அவ ருக்கு அளிக்கப்பட்டு பாதிப்பு குணப்படுத்தப்பட்டது. மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சாந்தி, முதுநிலை மருத்துவர் டாக்டர் பிரவீண் குமார், டாக்டர் குடியரசு ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஏறத்தாழ ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே, அவரது விவரங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து மூதாட்டியின் உறவினர்களைக் கண்டறிய முயற்சி மேற்கொண்டோம்.
அதன் பயனாக, அவரின் பேத்தி தேன்மொழி அதைப் பார்த்து மருத்துவமனைக்கு வந்தார். அல்சைமர் நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள அந்த மூதாட்டி அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி விடுவதாக அவர் அப்போது கூறினார்.
இதையடுத்து, அந்த மூதாட்டியை அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தன் நிலை மறந்த மூதாட்டிக்கு மனித நேயத்தோடு சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்