என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய பாகிஸ்தான்"
- பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.
- பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.
இந்நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
அகமதாபாத்தில் இன்று இந்திய அணி அனைத்து விதங்களிலும் சிறப்பான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டுகள். இனி வரும் போட்டிகளுக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.