என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரோக்கியமான உணவுகள்"

    • தேனை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
    • இளநீர் அடிக்கடி குடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.

    * தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது.

    * வைட்டமின் சி நிறைந்த பழச்சாறுகளை அதிகம் குடித்து வந்தால், சருமம் பொலிவடையும்.

    * ஊறவைத்த பாதாமை தினமும் 5 என்ற எண்ணிக்கையில் உட்கொள்வது சரும வறட்சியை தடுக்கும்.

    * தேனை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

    * வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயால் தோலை முழுவதும் மசாஜ் செய்து குளித்து வந்தாலும் உடல் சூடு குறைந்து சருமம் பொலிவு பெறும்.

    * கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தில் தடவி குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.

    * எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து சருமத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

    * பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

    * இளநீர் அடிக்கடி குடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.

    * வைட்டமின் சி உள்ள எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் போன்ற புளிப்பு பழங்களை உட்கொள்வது சருமத்தைப் பாதுகாக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழைக்காலத்தில் நோய்த் தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
    • ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

    தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓட்டல்களில் ருசிப்பதை விரும்புகிறார்கள். நொறுக்குத் தீனிகள் தொடங்கி, விதவிதமான உணவுகள் வரை, வீட்டை விட வெளியே உண்பது பலருக்கும் பிடிக்கிறது. அதனால்தான் உணவகங்கள், உணவுப் பண்ட கடைகளில் கூட்டம் முண்டியடிக்கிறது.


    ஆனால் இப்படி வெளியில் உண்பது, ஆரோக்கியமான பழக்கம் அல்ல. ருசிக்கு அடிமையாகி நாம் வழக்க மாக்கிக்கொள்ளும் இந்த விஷயம், நன்மையை விட பாதிப்பையே அதிகம் தரும்.

    அதிலும், மழைக்காலத்தில் வெளிப்புற உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதால் பல சிரமங்களுக்கு உள்ளாக நேரிடலாம். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


    வயிற்றுத் தொற்று

    மழைக்காலத்தில் வயிற்றுத் தொற்றை தவிர்க்க வெளிப்புற உணவுகளை வாங்கி சாப்பிடுவதை குறையுங்கள். ஏனெனில் தெருவோர உணவுகளில் சுகாதாரக் கேடுகள் அதிகமாக இருக்கலாம். அத்தகைய உணவகங்களில் பயன்படுத்தும் சுகாதாரமற்ற நீர் உள்ளிட்டவற்றில் பாக்டீரியாக்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருக்கலாம்.

    எனவே அவை, சமைக்கப்படும் உணவுகளில் தங்கிவிடும். எனவே இந்த உணவுகளை சாப்பிடும்போது நுண்ணுயிரிகள் வயிற்றுக்குள் சென்று வயிற்றுத் தொற்றை ஏற்படுத்தும்.


    குடிநீர்

    மழைக்காலத்தில் தண்ணீரால் நோய்த் தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அசுத்தமான நீரை குடிப்பதும், அசுத்தமான நீரில் சமைத்த உணவை சாப்பிடுவதும் தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே வெளிப்புற கடை களில் கொடுக்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் தண்ணீரை சரியாக பாதுகாப்பது கிடையாது. பொதுவாக மழைக்காலத்தில், சூடான நீரை குடிப்பது நல்லது.


    கொழுப்பு-கலோரிகள்

    தெருவோர உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாகவே இருக்கும். நீங்கள் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் ஒரு நாளைக்கு எவ்வளவு கொழுப்பு. கலோரிகள் சேரும் என்று உங்களுக்கு தெரியாது. இதன் விளைவாக உங்களது உடல் எடை அதிகரிக்கும். பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


    அரைகுறையாக சமைத்த உணவு

    வெளிப்புற உணவுகள் அரைகுறையாக சமைக்கப் பட்டிருக்கலாம் என்பதால் அது ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். செரிமானப் பிரச்சனை. உணவு நஞ்சாதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.


    இரைப்பை, குடல் பிரச்சினை

    மழைக்காலத்தில் வெளிப்புற உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இரைப்பை, குடல் பிரச்சனைகள் மாதிரியான அவதிகளுக்கு உள்ளாகலாம். வாந்தி, வயிற்றுவலி, காய்ச்சல், குமட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    பொதுவாக மழைக்காலம் மட்டுமல்ல, எக்காலத்திலும் முடிந்த அளவுக்கு வெளியில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஆசைக்காக, எப்போதாவது, அதிலும் சுகாதாரமாக காணப்படும் இடங்களில் உண்ணலாம்.


    வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். பிடித்த உணவுகளையும், ருசித்துப் பார்க்க விரும்பும் புதிய உணவுகளையும் அதற்கான மூலப்பொருட்களை வாங்கி வீட்டிலேயே தயாரிக்கலாம்.

    இதனால் நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம். நமக்கு பிடித்த உணவை நாமே தயாரித்து உண்ட திருப்தியும் கிடைக்கும்.

    ×