search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ரசிகர்"

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
    • இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது, ஆனால் அரசியல் பதற்றம் காரணமாக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டது. பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நாங்கள் நடத்தபோவதில்லை என பாகிஸ்தான் கூறி வருகிறது.

    இதற்கிடையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

    இந்நிலையில் வெளியில் வீடியோ கேம் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் சென்றனர். இவர்களை பார்த்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், அவர்களிடம், தயவுசெய்து ஒரு விஷயம் சொல்லுங்கள், நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு சூர்யகுமார் யாதவ் அது நம் கையில் இல்லை என கூறினார். இதனை வீடியோ எடுத்த பாகிஸ்தான் ரசிகரை ரிங்கு சிங், வீடியோ எடுப்பதை நிறுத்துங்கள் என கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட வேண்டாம் என்று கூறி ஒரு போலீஸ் அதிகாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • காவல்துறை அதிகாரியை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

    பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உலகக் கோப்பை போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகரை "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட வேண்டாம் என்று கூறி ஒரு போலீஸ் அதிகாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த ரசிகர் 'இந்திய ரசிகர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிடும்போது, நான் ஏன் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட கூடாது?' என்று கேட்டார்.

    அதற்கு அதிகாரி மீண்டும் 'அப்படி சொல்லகூடாதுதான்' என கூறினார்.

    உடனே அந்த ரசிகர் அந்த அதிகாரியின் பதிலை தனது தொலைபேசியில் வீடியோ பதிவு செய்ய முயற்சித்தார். மேலும் அந்த ரசிகர், "பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா போட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது நான் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்ல கூடாதா?" என மீண்டும் கேட்டார். இதற்கு பதில் அளிக்காமல் அந்த இடத்தை விட்டு போலீஸ் அதிகாரி நகர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தனது நாட்டு அணியினரை உற்சாகப்படுத்த ஒரு ரசிகர் அனுமதிக்கப்படாதது "வெட்கக்கேடானது" என்று அந்த காவல்துறை அதிகாரியை கடுமையாக சாடி வருகின்றனர்.


    ×