search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பறிமுதல்"

    • கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி திருப்பூரில் இந்த வங்கி கிளையில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 300 கிராம் அடகு வைத்த நகைகளை மீட்டனர்.
    • கடந்த 2 நாட்களாக டி.எஸ்.பி., தலைமையிலான கேரள போலீசார், திருப்பூரில் தங்கி ஏற்கனவே நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிகளில் மேலும் ஆய்வு நடத்தினர்.

    திருப்பூர்:

    கேரள மாநிலம், கோழிக்கோடு, வடகரையில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்த மாதா ஜெயக்குமார் என்பவர் ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ 800 கிராம் போலி தங்க நகைகளை வைத்து விட்டு அசல் நகைகளை கையாடல் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் மாதா ஜெயக்குமாரை, இரு மாதம் முன்பு தெலுங்கானாவில் கைது செய்தனர். அசல் நகைகளை திருப்பூரில் தனது நண்பர் கார்த்திக் என்பவர் பணிபுரியும் டி.பி.எஸ்., வங்கி கிளையில் அடகு வைத்து பணம் பெற்று மோசடி செய்தது தெரிந்தது.

    கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி திருப்பூரில் இந்த வங்கி கிளையில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 300 கிராம் அடகு வைத்த நகைகளை மீட்டனர். கடந்த மாதம் 11ந் தேதி திருப்பூர் மாநகரில் உள்ள சி.எஸ்.பி., வங்கியின், 3 கிளை மற்றும் காங்கயத்தில் உள்ள ஒரு கிளை என, 4 வங்கியில் இருந்து, 1.75 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக டி.எஸ்.பி., தலைமையிலான கேரள போலீசார், திருப்பூரில் தங்கி ஏற்கனவே நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிகளில் மேலும் ஆய்வு நடத்தினர். இதில், 4கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும், வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து 10 பவுன் நகையை திருடிச் கொண்டு தப்பிவிட்டார்.
    • இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் ஸ்டிபன்ராஜ். தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி ஜெனிபர் (வயது 27). வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவ்வழியே பிச்சை எடுத்து வந்த பெண்கள், ஜெனிபரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து பெண்களுக்கு கொடுத்த நேரத்தில், அதே கும்பலை சேர்ந்த மற்றொரு பெண், வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து 10 பவுன் நகையை திருடிச் கொண்டு தப்பிவிட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் வந்து பார்த்த ஜெனிபர், பீரோ திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதிலிருந்த 10 பவுன் நகை கொள்ளைபோன விஷயத்தை அக்கம் பக்கத்தினரிடம் கூறினார்.

    இதையடுத்து பிச்சை எடுப்பது போல வந்த பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பக்கத்து தெருவில் நடுந்து சென்று கொண்டிருந்தனர். அவ்வழியே சென்றவர்களின் உதவியுடன் 5 பெண்களை மடக்கிப்பிடித்த ஜெனிபர், அவர்கனை உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தார். அவர்களிடமிருந்த 10 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் நாடோடிகளாக வாழ்ந்து வரும் இந்த பெண்கள், ஊர் ஊராக சென்று பிச்சை எடுப்பது போல நடித்து, தனியாக உள்ள பெண்களிடம் பேச்சு கொடுத்து, அவர்களின் வீட்டில் கொள்ளையடிப்பதை தொழிலாக செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், ஈரோட்டை சேர்ந்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட 5 பெண்களும், அய்யப்பன் மனைவி முத்தம்மாள் (36), கோபால் மனைவி மீனாட்சி (30), ஜீவா மனைவி கவிதா (36), சுப்புடு மனைவி மங்கம்மாள் (35), கண்ணன் மனைவி முனியம்மாள் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்தனர்.

    ஆனால், இவர்களிடம் தங்களின் பெயர், விலாசம் போன்றவைகளுக்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனால் இவர்களின் கைரேகைகளை பதிவு செய்வதிலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதிலும் போலீசாருக்கு நடைமுறை சிக்கல்கள் இருந்தது. இதனால் உளுந்தூர்பேட்டை போலீசார் செய்வதறியாது திணறி வருகின்றனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜின் கவனத்திற்கு இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உளுந்தூர்பேட்டை போலீசார் வைத்துள்ளனர். அவரின் சிறப்பு அனுமதி கிடைத்தால் மட்டுமே நாடோடி பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கமுடியுமென உளுந்தூர்பேட்டை போலீசார் புலம்பி வருகின்றனர்.

    ×