என் மலர்
நீங்கள் தேடியது "செயற்கையாக"
- ஓட்டல் உாிமையாளா்கள் ஆண்டுதோறும் உரிமம் அல்லது பதிவுசான்றை புதுப்பிக்க வேண்டும்.
- உணவுப்பொருட்கள் தயாரிப்பு இடங்களில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் பயிற்சி பெற்றவர் பணியில் இருக்க வேண்டும்.
திருப்பூர்:
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமை தாங்கி பேசியதாவது:-
ஓட்டல் உாிமையாளா்கள் ஆண்டுதோறும் உரிமம் அல்லது பதிவுசான்றை புதுப்பிக்க வேண்டும். தரமான உணவுப்பொருட்கள் மற்றும் உணவுகளையே விற்பனை செய்ய வேண்டும். அனைத்து ஓட்டல்கள், உணவுப்பொருட்கள் தயாரிப்பு இடங்களில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் பயிற்சி பெற்றவர் பணியில் இருக்க வேண்டும். ஓட்டல்களில் சமையல் அறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உபயோகிக்காமல் பயோ-டீசல் உற்பத்திக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவுப்பொருட்களில் நிறமி சேர்க்க கூடாது. பழங்களை செயற்கை வகையில் பழுக்க வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.