search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூச சிறப்புகள்"

    • முருகப் பெருமான் நடனப் பிரியன். அவனே நடன சிகாமணி.
    • முருகன் குடையுடன் கூத்தாடி அசுரர்களை வென்றார்.

    ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் சூரியன் கிழக்கில் இருந்து தென்பக்கமாக உதிக்கும் காலம்.

    இக்காலத்தை தட்சிணாயன புண்ணிய காலம் என்பர்.

    தை முதல் ஆனி வரையான 6 மாத காலம் சூரியன் கிழக்கில் இருந்து வடக்குப் பக்கமாக உதிக்கும்.

    இதை உத்திராயண புண்ணிய காலம் என்பர்.

    வடதிசை இறைவனுக்குரிய திசை.

    இறைவன் வடதிசையில் வீற்றிருக்கிறான்.

    தை முதல் ஆனி வரை தேவர்களுக்கு ஒரு பகல் பொழுது, ஆடி முதல் மார்கழி வரை ஒரு இரவு.

    இந்த இரண்டும் சேர்ந்த பகலிரவு அவர்களுக்கு ஒரு நாள் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

    இவ் வகையில் மார்கழி வைகறைப் பொழுதாகவும், தை மாதம் இளங்காலைப் பொழுதாகவும் கொள்ளப்படுகிறது.

    இறைவனைத் தொழ அவனுடைய அருளைப் பெற மிகச் சிறப்பான நேரம் வைகறைப் பொழுதும் இளங்காலைப் பொழுதுமாகும்.

    சூரியன் மகர ராசியில் பிரவேசித்து உதிக்கும் நாளன்று நாம் மகர சங்கராந்தி என்று தைப் பொங்கல் நாளாகக் கொண்டாடுகிறோம்.

    இந்த பிரபஞ்சத்தையும், உயிர்களையும் படைத்த இறைவன், தன் கருணையினால்,

    கருவறையில் அசைவற்றுக் கிடந்த உயிர்களுக்கு, உடல் கொடுத்து, அவன் படைத்த இந்த உலகத்தையும்

    அதன் பொருட்டான இயற்கையையும் நாம் அனுபவிக்கச் செய்து,

    இந்த பிரபஞ்சத்தை இடையறாது இயக்கி வரும் பொருட்டு,

    திருநடனம் புரிந்த தினமாகத் தைப்பூச நன்னாளை ஆன்றோர் வகுத்துள்ளனர்.

    இறைவன் உயிர்கள் பொருட்டு நடனம் புரிந்த தினம் தைப்பூச தினம்.

    இந்த பிரபஞ்சம் முழுவதும் அவன் திருநடனத்தால் தான் இயங்குகின்றன.

    எனவே இறைவன் ஆனந்த நடனம் புரிந்த நாளாகத் தைப்பூச நன்னாளைக் கொண்டாடி வருகிறோம்.

    முருகப் பெருமான் நடனப் பிரியன்.

    அவனே நடன சிகாமணி.

    முருகன் "குடை", "துடை", "பவுரி" என் னும் பலவகைக் கூத்துக்களை ஆடினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முருகன் குடையுடன் கூத்தாடி அசுரர்களை வென்றார்.

    அதனால் அவருக்கு "சத்ரநடன மூர்த்தி" என்று பெயர்.

    சிலப்பதிகாரம் முருகப் பெருமானின் கூத்தை விளக்குகிறது.

    சிதம்பரத்தில் எல்லாவித இசைக் கருவிகளும் ஒலிக்க முருகன் நடனமாடினான் என்பார்கள்.

    பல கோவில் சிற்பங்களில் முருகப்பெருமான் நடனம் புரியும் சிற்பங்கள் உள்ளன.

    முருகப் பெருமான் நடனமூர்த்தி என்பதற்கு இவைகள் சிறந்த எடுத்து காட்டாக விளங்குகின்றன.

    • உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது.
    • திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது.

    தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது.

    உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது.

    அதிலிருந்தே அண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோவில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது.

    அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தி கோவில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோவிலின் வாயிலில் ஒரு பிரம்மஹத்தி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவபெருமான் பார்வதியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.

    வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த் தொலியும் ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை,

    வியாக்கிர பாதமுனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரம் தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் தரிசித்து ஆனந்தமடைந்தார்கள்.

    பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக

    சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.

    சிதம்பரத்திற்கு வந்து அரும் பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, ரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது தைப்பூசப்புண்ணிய தினத்தன்று தான்.

    அதன் காரணமாகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    • மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 12ம் நாள் தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறும்.
    • இக்குளம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய கணபதிதான் முக்குறுணிப் பிள்ளையார்.

    * பஞ்ச சபைகளில் ஒன்றான ஞானசபையில் சிவபெருமான், உமாதேவியோடு சேர்ந்து ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் தைப்பூசத் திருநாள்.

    * தாமிரபரணியில் தைப்பூசத்தன்று பராசக்தி நீராடி இறைவன் அருளைப் பெற்றாள்.

    * மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 12ம் நாள் தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறும்.

    சொக்கன், மீனாட்சியுடன் எழுந்தருளி உலாவருவார்கள்.

    இக்குளம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய கணபதிதான் முக்குறுணிப் பிள்ளையார்.

    * தைப்பூசம் வியாழக்கிழமையன்று வந்தால், அன்று மட்டும் திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் உள்ள காசிபநாதர் ஆலய நடராசருக்கு புனுகுசார்த்தி பூஜை செய்வார்கள்.

    அதனால் இவருக்கு புனுகுசபாபதி என்றே பெயர்.

    * செல்வம் வேண்டுபவர்கள் வியாழனன்று வரும் பூசத்துன்று மகாலட்சுமி பூஜையை ஆரம்பிப்பார்கள்.

    தைப்பூசத்தன்று சிவன், முருகன், மகாலட்சுமி கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதைக் காணலாம்.

    • 1871ல் பிரஜோபதி வருடத்தில் வள்ளலார் ராமலிங்க அடிகள் முதல் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார்.
    • இங்கு தென்கிழக்கே ஒரு பாம்புப் புற்று பெரிதாக உள்ளது. இது ஒரு அதிசயப்புற்று.

    * பாபநாசம் பாபநாகர் ஆலயத்தில் தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்பிடை நின்று ஆடிக்காட்டியதால், அன்றைய தினம் நந்திக்கு சந்தனக் காப்பிடுவார்கள்.

    * தைப்பூசத்தன்று வடலூரில் ஜோதி தரிசனம் காணலாம்.

    இதை சத்ய ஞான சபையில் மாதந்தோறும் பூசத்தன்று 6 திரைகளை விலக்கி பாதி தரிசனம் காண வைப்பர்.

    ஆனால் தைப்பூசத்தன்று மட்டும் 7 திரைகளை முழுவதும் விலக்கி முழுமையான ஜோதி தரிசனத்தை கண்ணாடியில் காட்டுவார்கள்.

    1871ல் பிரஜோபதி வருடத்தில் வள்ளலார் ராமலிங்க அடிகள் முதல் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார்.

    அது இன்றளவும் நடைபெறுகிறது. அவர் ஏற்றிய அடுப்பு அணையா அடுப்பாக பக்தர்களுக்கு இடைவிடாது அன்னதானமளித்து வருகிறது.

    * கதித்தமலை முருகன் கோவிலில் தைப்பூசம் கழித்த 4ம் நாளன்று காலை மலைமீது தேரோட்டம் நடைபெறும்.

    இவ்வாலயம் மலைமீது அமைந்துள்ளதால் இங்கு தென்கிழக்கே ஒரு பாம்புப் புற்று பெரிதாக உள்ளது.

    இது ஒரு அதிசயப்புற்று.

    உத்தராயன புண்ணிய காலமாகிய தை முதல் ஆனி வரை வளர்ந்தும், தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி முதல் மார்கழி வரை தேய்ந்தும் வருவது சிறப்பாகும்.

    • திருப்பைஞ்சீலி சிவாலய குடைவரை சந்நிதியில் சிவனும் அம்பாளும் முருகருடன் காட்சி தருகின்றனர்.
    • இவ்விழா தில்லையில் பத்து நாட்கள் நடைபெறும்.

    * தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூச நட்சத்திரம் சேரும் நாளே தைப்பூசத் திருநாளாகும்.

    உலகில் முதலில் நீரும், அதிலிருந்து உயிர்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    இவை நடைபெற்ற நாள்தான் தைப்பூச நாள்.

    இத்திருநாள் முருகன் அருளும் எல்லா திருத்தலங்களிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    தைப்பூசத்தன்றுதான் வள்ளியை முருகன் மணம் புரிந்து கொண்டார்.

    * ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கை தீர்த்தக்கரையில் தீர்த்தவாரியும், நடன தரிசனமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    இவ்விழா தில்லையில் பத்து நாட்கள் நடைபெறும்.

    இந்த தாண்டவம் காண வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமுனி ஆகிய மூன்று முனிவர்களின் சிலைகளை ஒரே பீடத்தில் எழுந்தருளச் செய்து சிவகங்கை கரைக்கு கொண்டு வருவர்.

    * திருப்பைஞ்சீலி சிவாலய குடைவரை சந்நிதியில் சிவனும் அம்பாளும் முருகருடன் காட்சி தருகின்றனர்.

    அவர்கள் காலடியின் கீழ் குழந்தை வடிவ எமனைக் காணலாம்.

    இங்கு தைப்பூசத்தன்று சிவன் எமனுக்கு பதவி அருளும் விழா நடைபெறும்.

    ×