search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம"

    • பா.ஜ.க.-வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின்- ரேவந்த் ரெட்டி.
    • அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்?- உச்சநீதிமன்ற நீதிபதி.

    ஒரு முதல் மந்திரி இப்படி பேசலாமா? நீதித்துறையை மதிக்காவிடில் விசாரணையை வேறு எங்கேயாவது மாற்றுவோம் என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தள்ளார்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் பாரத் ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு (சந்திரசேகர ராவ் மகள்) உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கவிதா திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    கவிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி "பா.ஜ.க.-வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின் கிடைத்தது'' எனக் கூறியிருந்தார்.

    இதற்கிடையே ரேவ்ந்த் ரெட்டி, கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது தெலுங்கானா சட்ட மேலவைக்கு நடந்த தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை மத்திய பிரதேச மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.கே. மிஸ்ரா, கே.வி. விஸ்வநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.

    அப்போது, ரேவந்த் ரெட்டியின் கருத்து குறித்து நீதிபதி கவாய் கூறியதாவது:-

    ரேவந்த் ரெட்டி என்ன சொன்னார் என்பதை படித்து பார்த்தீர்களா? முதல்வரின் இத்தகைய அறிக்கைகள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடும். அரசியல்வாதிகளுக்கும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கும் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். அரசியல்சாசன பதவியில் இருக்கும் ஒருவர் கூறலாமா? அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்? நீதித்துறையை மதிக்காவிட்டால், விசாரணையை வேறு எங்காவது மாற்றுவோம். நாட்டில் உச்சபட்ச நீதிமன்றம் இதுதான்.

    இவ்வாறு நீதிபதி கவான் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    "நான் நீதித்துறை செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். எனது அறிக்கைக்காக நிபந்தனையின்றி எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை மற்றும் அதன் சுதந்திரத்தின் மீது எனக்கு நிபந்தனையற்ற மரியாதையும் உயர்ந்த மரியாதையும் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறிமுறைகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட நான், நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறேன்" என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.
    • அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக நீதிமன்றத்தில் புகார்.

    இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    முன்னதாக,

    கடந்த 2022-ம் ஆண்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

    அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இது தொடர்பாக நேரில் ஆஜராக நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியும் அண்ணாமலை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனது பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நிதி பெறுவது தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
    • வேட்பாளர்கள் விவரங்களை வாக்காளர்கள் கேட்கும் உரிமை போன்று இதில் கோர முடியாது

    பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன்மூலம் ஒரு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனம் வங்கி மூலம் தேர்தல் பத்திரங்களை பெறலாம். இந்த பத்திரங்களை கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக வழங்கலாம். இதை எந்தவித கட்டுப்பாடும் இன்றி அரசியல் கட்சி நிதியாக மாற்றிக்கொள்ளலாம். இந்த பணம் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது மற்றவர்களுக்கு தெரியாது.

    இந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

    இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதத்தை நேற்று உச்சநீதிமன்றத்தில், அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி தாக்கல் செய்துள்ளார். அதில் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர்கள் யார் என்பதை அறிய மக்களுக்கு உரிமை இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மேலும், நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படாமல் எதையும் மற்றும் அனைத்தையும் அறிய பொதுவான உரிமை இருக்க முடியாது. குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் விவரங்களை வாக்காளர்கள் கேட்கும் உரிமை என உச்சநீதிமன்றம் 2020-ல் உறுதிப்படுத்தியது, கட்சி பெறும் நிதி விவரங்களை கோரும் உரிமையாக கருத முடியாது.

    குறிப்பிட தகுந்த காரணங்கள் இன்றி, பொதுவாக அனைத்து விவரங்களை கேட்கும் உரிமை கிடையாது. பொதுமக்களின் உரிமை பாதிக்கப்படாத வகையில், எல்லா தரவுகளையும் வழங்க வேண்டியது அவசியம் இல்லை. நீதிமன்றத்தின் வரம்பிற்குள் இந்த விவகாரம் அடங்காது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×