search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி பகுதி"

    • பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.
    • நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உட்பட பள்ளிகள் அமைந்துள்ளது.பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    அப்போது ரோட்டில் வேகமாக வரும் வாகனங்களால் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக பள்ளி மாணவ, மாணவிகள் ரோட்டை கடக்கும் இடத்தில் டிவைடர்கள் வைக்க வலியுறுத்தப்பட்டது. அதன்படி சில ஆண்டுகளுக்கு முன், சோமவாரப்பட்டியில், மாநில நெடுஞ்சாலையில் டிவைடர் வைக்கப்பட்டது. சில மாதங்களில் அங்கிருந்து அகற்றப்பட்ட டிவைடர் மீண்டும் வைக்கப்படவில்லை.

    இதே போல் கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பொட்டையம்பாளையம், லிங்கம்மாவூர், புதூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வருகின்றனர்.நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே குடிமங்கலம் போலீசார், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக மாநில நெடுஞ்சாலையில் டிவைடர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    ×