என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்கஸ் ஸ்டோய்னிஸ்"

    • ஆஸ்திரேலிய அணி தங்களுக்கு என தனி செஃப்-ஐ பயன்படுத்தி வருகிறது
    • இந்திய வீரர்கள் சிலர் இதுபோன்று நியமித்துள்ளதால், தானும் வைத்துள்ளதாக ஸ்டோய்னிஸ் கூறுகிறார்

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. சுமார் ஒன்றரை மாத காலம் நடைபெறும் நீண்ட தொடர் என்பதால், வீரர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். அப்போதுதான் தொடர் முழுவதும் திறம்பட விளையாட முடியும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உணவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும்போது, இந்தியாவின் வெப்பத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவதிப்படுவார்கள். அதேபோல் உணவும் அவர்களுக்கு ஏற்றபடி இருக்காது.

    இதனால் பெரும்பாலும் தங்களுக்கென தனி செஃப்-ஐ வைத்துக் கொள்வார்கள். தற்போது, இந்தியா வந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தங்களுக்கென தனியாக செஃப்-ஐ ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த நிலையில், தனது உடதற்குதியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பிய அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனக்கென தனி செஃப்-ஐ நியமித்துள்ளார். இவர் போட்டிகளுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். அவருடன் அவரது செஃப்-வும் இந்தியாவை சுற்றி வருகிறார். இந்த செஃப் பிரெஞ்ச் உணவு தயாரிப்பதில் கைத்தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

    "இந்திய வீரர்களின் சிலர் இதுபோன்று தனியாக செஃப் வைத்துள்ளனர். அதனால் எனக்கும் அதுபோன்று யோசனை தோன்றியது" என ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார். மேலும், "நான் எப்போதும் எனது உணவு மற்றும் போட்டியாக்காக தன்னை தயார்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    சல்தான்ஹா என்ற அந்த செஃப், அமெரிக்காவின் சிகாகோ மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ள பிரபலமான ரெஸ்டாரன்டில் பணிபுரிந்தவர். லக்னோ அணியின் கே.எல். ராகுல் பரிந்துரை செய்ததன் பேரில், ஐ.பி.எல். போட்டியின்போது மார்கஸ் ஸ்டோய்னிஸ், இவரை சந்தித்துள்ளார். தற்போது உலகக் கோப்பையின்போது செஃப்-ஆக பயன்படுத்திக் கொண்டார்.

    ஸ்டோய்னிஸ் இந்த உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடி 5, 20 (நாட்அவுட்), 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    • அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார்.
    • அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.

    ஐபிஎல் தொடரின் 67-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.

    இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. போட்டியின் 2-வது ஓவரை அவர் தான் வீசினார். இந்த ஓவரில், 2-வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஸ்டோய்னிஸிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.

    ஆனால், அவர் ரிவ்யூ எடுக்கவே, பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்றது தெளிவாக தெரிந்தது. இதன் காரணமாக நடுவர் முடிவு திரும்ப பெறப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்காத போதிலும், அவர் கிரீஸிற்குள்ளாக நின்று கொண்டிருந்தார். அப்போது அர்ஜூன் டெண்டுல்கர் பந்தை அவரை நோக்கி எறிவது போன்று ஆக்ஷன் செய்தார். இதற்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஏதோ கூறியபடி நடந்து வந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சச்சின் மகன் என்பதால் அவருக்கு அபராதம் விதிப்பார்களா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.

    அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார். அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார். அவரின் 3-வது ஓவரின் முதல் 2 பந்துகளை பூரன் 6 சிக்சர் விளாசினார். இதனால் பயந்து அர்ஜூன் வெளியேறிவிட்டதாகவும் கிண்டலடித்து வருகின்றனர். 

    • 2-வது இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த வனிந்து ஹசரங்கா 2-வது இடத்தில் உள்ளார்.
    • வங்காளதேச வீரர் சகிப் அல் ஹசன் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்டோய்னிஸ் பேட்டிங்கில் 156 ரன்களும் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதனால் ஐசிசி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    2-வது இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த வனிந்து ஹசரங்கா 2-வது இடத்தில் உள்ளார். வங்காளதேச வீரர் சகிப் அல் ஹசன் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது நபி 3 இடங்கள் பின் தங்கி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    டாப் 10-ல் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளார்.


    இந்த பட்டியலில் நேபாள் வீரர் சிங் ஐரீ 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். மேலும் இந்திய ஆல் ரவுண்டரான அக்சர் படேல் மற்றும் மேக்ஸ்வெல் 18-வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.

    • இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றது.
    • பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது.

    பிக் பாஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர்களும் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் ஸ்டெக்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    இந்நிலையில் இப்போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை இழந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ், இன்னிங்சின் 8-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சர் அடிக்கும் முயற்சியில் விளாசினார். அதனை கேன் ரிச்சர்ட்சன் கேட்ச் பிடித்தார்.

    இருப்பினும் இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றதால், பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் அது மேற்கூரையில் படாமல் ஃபீல்டரிடம் சென்றதையடுத்து அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டொய்னிஸ் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

    இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவெனில், இப்போட்டியை காண உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச்சும் மைதானத்தில் இருந்தார். இந்த கேட்சைப் பார்த்த அவரும் என்ன நடந்தது என நம்பமுடியாமல் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தார். ஸ்டோய்னிஸ் விக்கெட் இழந்த விதத்தைப் பார்த்து ஷாக்கான ஜோகோவிச்சின் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • நட்சத்திர வீரர்களில் ஒருவர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்.
    • வேறொரு வீரர் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

    உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மார்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவதாக அறிவித்து இருக்கிறார்.

    இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓய்வு அறிவித்து இருக்கிறார்.

    முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் இவர் ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோய்னிஸ்-க்கு பதில் வேறொரு வீரர் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

    35 வயதான மார்கஸ் ஸ்டோய்னிஸ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்திய போட்டிகளின் போது ஸ்டோய்னிஸ் காயத்தில் அவதியுற்றதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில், நட்சத்திர வீரர் ஸ்டோய்னிஸ் ஓய்வு அறிவித்து இருப்பது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    ×