என் மலர்
நீங்கள் தேடியது "5 மாநில சட்டமன்ற தேர்தல்"
- காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்காத ஹவாமஹால் தொகுதியில் பால்முகந்த் ஆச்சார்யா நிறுத்தப்பட்டுள்ளார்.
- தேர்தலை முன்னிட்டு, இரண்டு பட்டியல்களில் பாஜக 124 வேட்பாளர்களை அறிவித்தது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வரும் 7ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் மற்றும் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.
இந்நிலையில், மூன்றாவது வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில், முதல்வர் அசோக் கெலாட்டை எதிர்த்து சர்தார்புரா தொகுதியில் மகேந்திர சிங் ரத்தோர் போட்டியிடுகிறார்.
அசோக் கெலாட்டின் முன்னாள் துணைத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டை எதிர்த்து பாஜக தலைவர் அஜித் சிங் மேத்தா டோங்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்காத ஹவாமஹால் தொகுதியில் பால்முகந்த் ஆச்சார்யா நிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக, இரண்டு பட்டியல்களில் பாஜக 124 வேட்பாளர்களை அறிவித்தது. இதுவரை, ராஜஸ்தானில் உள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 182 தொகுதிகளுக்கு அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.