என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி காற்று மாசுபாடு"
- மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் அவசியம் என குறிப்பிட்டார்.
- மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளை காரணம்.
புதுடெல்லி:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது, டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாடு அளவீடுகளை குறிப்பிட்ட அவர், டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும், வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்து விடும் என்றும் சொன்னார். "3 நாட்கள் அங்கு தங்கினீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு ஏதாவது தொற்று வந்துவிடும்" என்று கூட்டத்தினரைப் பார்த்து அவர் கூறினார்.
மாசுபாட்டில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாகவும், இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு நிலையை அவசரமாக கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் அவசியம் என குறிப்பிட்டார்.
மேலும், "மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளை காரணம். நாங்கள் கிட்டத்தட்ட ரூ. 22 லட்சம் கோடி மதிப்புக்கு புதை படிவ எரிபொருளை இறக்குமதி செய்கிறோம். இதற்கு பதிலாக மாற்று எரிபொருளை நான் ஆதரிக்கிறேன். புதை படிவ எரிபொருள் இறக்குமதியை குறைத்து, பசுமை எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்து விவசாயிகளின் பைகளில் ரூ.12 லட்சம் கோடி வரை சேமிக்க விரும்புகிறேன்" என்றார்.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் தயாரித்த காற்று தர குறியீட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி, மேற்கண்ட எச்சரிக்கை விஷயங்களை அவர் குறிப்பிட்டார்.
- இன்னும் இரண்டு வாரத்திற்கு இந்த நிலை நீடிக்கும் என தகவல்
- குழந்தைகள், முதியவர்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்று காலை அது மிகவும் மோசடைய, மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் லோதி சாலை, ஜஹான்கிர்புரி, ஆர்.கே. புரம், விமான நிலையம்(டி3) பகுதிகளில் இன்னும் மோசமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசு அளவிடு இந்த பகுதிகளில் முறையே 438, 491, 486 மற்றும் 473 எனப் பதிவாகியுள்ளது.
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் முக்கியத்துவம் இல்லாத கட்டட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
டெல்லியின் அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள விவசாய இடங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதாலும், சாதகமற்ற வானிலை நீடிப்பதாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மோசமான நிலையில்தான் இருக்கும் என வல்லுனர்கள் தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளர். மருத்துவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர்.
- மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியில் பாடம் கற்க அம்மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.
- ட்ரோன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து அபாயகர நிலையிலேயே உள்ளது.
காற்றின் தரம் அபாயகர நிலையில் இருப்பதை அடுத்து டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை ஆரம்ப பள்ளிகள் ஆன்லைன் வழி கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டார். இதையடுத்து 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியில் பாடம் கற்க அம்மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.
காற்று மாசுடன் பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் உருவானது.
இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் ஆனந்த் விஹார் பகுதியில் காற்று மாசுடன் பனிமூட்டமும் சூழ்ந்து கொண்டது. இதுதொடர்பான ட்ரோன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது.
- டெல்லியில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு பிரச்சனை மிகவும் தீவிர மடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது.
நேற்றிரவு 7 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 457 ஆக அதிகரித்தது. இந்நிலை யில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரக் குறியீடு 481 ஆக உயர்ந்துள்ளது. இதனால் டெல்லியில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே கிராப் திட்டத்தின் 1, 2, 3 நிலை கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் 4-வது நிலை கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவி களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் டெல்லியில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரம் அரசின் உத்தரவுப்படி 10 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும்.
புதிய கட்டுப்பாடுகளின் படி அனைத்து வகையிலும் அரசு திட்ட கட்டுமான பணிகளுக்கு கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு, மாநகராட்சி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நகரில் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடர்ந்த பனி மூட்டம் காரணமாக விமான செயல்பாடுகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் வருகையில் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. பயணிகளுக்கு விமான அட்ட வணையை அந்தந்த நிறுவனங்கள் தெரிவிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
- காற்று மாசால் டெல்லி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
- பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவு.
தீபாவளி பண்டிகைக்குப் பிறகு டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. தற்போது மிகமிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மாஸ்க் அணிந்துதான் வெளியில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
காற்று மாசுக்கு முக்கியமான காரணம் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் அதாவது அறுவடை முடிந்தபின் சோளம் போன்ற கதிர்களின் தண்டுகள் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதுதான். இதன் மூலமாக காற்றில் புகை கலந்து மாசு ஏற்படுகிறது.
விவசாயக் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் கடுமையாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருந்த போதிலும் கழிவுகள் எரிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் 80 சதவீதம் அளவிற்கு விவசாயக்கழிவுகள் எரிக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அதிஷி மத்திய அரசை சாடியுள்ளார்.
- தொடர்ந்து நச்சு புகையை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு.
- காற்றின் தரக்குறியீடு 500-ஐ தாண்டி விட்டது.
புதுடெல்லி:
டெல்லியின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 7-வது நாளாக காற்றின் மாசு அபாய கட்டத்தை எட்டி உள்ளது. டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் ஆகிய நகரங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 500-ஐ தாண்டி விட்டது.
டெல்லி ஆனந்த் விகார், அசோக்விகார், பவானா, ஜஹாங்கிர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மாசு மிக மோசமாக இருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. தற்போது பனி பொழிவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளை புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரியவிட்டு செல்கின்றனர்.

காற்று மாசுவினால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. புகைமூட்டம் கார ணமாக டெல்லிக்கு 22 ரெயில்கள் தாமதமாக சென்றன. 9 ரெயில்களில் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விமான சேவையும் பாதிக் கப்பட்டுள்ளது. 8 விமா னங்கள் தரையிறக்க முடியா மல் திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணிகள் தவிப் புக்கு உள்ளானார்கள்.
தொடர் காற்று மாசுபாட் டால் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறிவிட்டது.
நேற்று முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி தெரி வித்துள்ளார். இந்த வகுப்பு கள் ஆன்லைன் மூலம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி பல்கலைக்கழ கத்தில் வருகிற 23-ந்தேதி வரையிலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 22-ந்தேதி வரையிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
காற்று மாசு பிரச்சினை இதுவரை இல்லாத வகை யில் உருவெடுத்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுவாச பிரச்சினை உள் ளிட்ட நோய்களால் அவதிப் பட்டு வருகின்றனர்.
இதனால் தினமும் ஆஸ்பத்திரியை நோக்கி படை யெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து ஒரு மணி நேரம் நச்சு புகையை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை சுவாசிப்பவர்க ளுக்கு உடனடியாக எதிர்ம றையான பாதிப்புகள் உட லில் ஏற்படுவதாகவும், இந்த துகள்கள் சுவாச மண்டலத் தில் நுழையும் போது நுரை யீரலில் வீக்கத்தை ஏற்படுத் துவதாகவும் டாக்டர்கள் தெரி விக்கின்றனர்.
இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க பொது மக்கள் முகக் கவசம் ( மாஸ்க்) அணிய தொடங்கி உள்ளனர்.
- சுத்தமான காற்று வாங்கக்கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் பயனர்கள் பதிவிடுகின்றனர்.
- பதிவு இணையத்தில் விவாதமாக மாறியுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக காற்று தரக்குறியீடு வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்த நிலையில், பள்ளிகளில் வகுப்புகள் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டதோடு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்களில் சுத்தமான காற்று சேவையாக விற்கப்படுவதாக சமூக வலைதளத்தில் பரவும் தகவல் பேசுபொருளாகி இருக்கிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவில் முதலீட்டாளராக பணிபுரியும் இந்திய என்ஜினீயரான டெபர்கியா தாஸ் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், அவர் டெல்லி தாஜ் ஓட்டலில் உள்ள ஒரு அறிவிப்பை காட்டுகிறார். அதில், அவரது விருந்தினர் அறையில் காற்று தரக்குறியீடு 58 ஆக இருந்தது. இது கடந்த சில நாட்களுக்கு முன்பு 397 வரை இருந்தது. இந்நிலையில் அவரது இந்த பதிவு வைரலான நிலையில் டெல்லியில் சுத்தமான காற்று ஒரு பிரீமியம் சலுகையாக மாறியுள்ளது எனவும், அது வாங்கக்கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் பயனர்கள் பதிவிடுகின்றனர். இதனால் அவரது பதிவு இணையத்தில் விவாதமாக மாறியுள்ளது.