search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவர் இடிப்பு"

    • பள்ளியின் காம்பவுண்டு சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர அச்சமடைந்தனர்.
    • பழமையான சுவர் இடித்து அகற்றப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய சுவர் கட்ட நடவடிக்கை எடுத்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பழமையான இந்த பள்ளியின் காம்பவுண்டு சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர அச்சமடைந்தனர்.

    சுமார் 170-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் இங்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சுவரை இடித்து அகற்றிவிட்டு புதிய சுவர் கட்டவேண்டும் என பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். பழமையான சுவர் இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், தயக்கம் காட்டி வந்தனர்.

    இந்நிலையில் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று காம்பவுண்டு சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதனைதொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் பொதுநிதியில் இருந்து விரைவில் புதிய சுவர் கட்டப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

    பழமையான சுவர் இடித்து அகற்றப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய சுவர் கட்ட நடவடிக்கை எடுத்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×