search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேகக் கட்டுப்பாடு"

    • வேகக் கட்டுப்பாட்டு விதிமுறையை கடைபிடிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
    • வேகக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, இலகுரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும்.

    இருசக்கர வாகனங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும். குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே, இந்த வேகக்கட்டுப்பாட்டு விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அமலுக்கு வந்துள்ள வேகக் கட்டுப்பாட்டு விதிமுறையை கடைபிடிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னையில் வேகக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.1.21 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    • குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகை வாகனங்களுக்கும் 30 கி.மீ வேகத்துக்குள் தான் செல்ல வேண்டும் என பெருநகர காவல்துறை அறிவித்து உள்ளது.
    • 15.9 சதவீதம் பேர் சரியானதே என்றும் 46 சதவீதம் பேர் மாற்றம் தேவை என்றும் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

    சென்னை:

    நாட்டில் 68 சதவீத சாலை விபத்துகளுக்கு வாகனங்களில் அதிவேகமாக செல்வதே காரணம் என மத்திய நெடுஞ்சாலை துறை தெரிவித்து உள்ளது.

    இதையடுத்து வேகக் கட்டுப்பாடு விதிமுறைகளை சென்னை காவல் துறை அறிவித்து உள்ளது.

    நாளை முதல் சென்னையில் கார், மினிவேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும், பஸ், லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மணிக்கு 50 கி.மீ வேகத்திலும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும் செல்லலாம். அதே வேளையில் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகை வாகனங்களுக்கும் 30 கி.மீ வேகத்துக்குள் தான் செல்ல வேண்டும் என பெருநகர காவல்துறை அறிவித்து உள்ளது.

    இந்த அறிவிப்புக்கு இருக்கும் வரவேற்பை அறிந்து கொள்ளும் வகையில் மக்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் சமுக ஊடகமான எக்ஸ் தளத்தில் சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு பக்கத்தில் கருத்துகள் கேட்கப்படுகின்றன.

    அதில் புதிய வேகக் கட்டுப்பாடு மிக சரியானதா, சரியானதா, மாற்றம் தேவயைா என 3 பகுதிகளாக பிரித்து கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன. புதிய வேகக் கட்டுப்பாடு 30 சதவீதம் பேர் மிக சரியானதே என்றும், 15.9 சதவீதம் பேர் சரியானதே என்றும் 46 சதவீதம் பேர் மாற்றம் தேவை என்றும் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

    மேலும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கை குறித்தும் தங்களது கருத்துக்களை பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    பொது மக்களின் கருத்துக்களின் அடிப்படை யில் புதிய வேகக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பான முடிவுகள் எடுக்க பெருநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×