என் மலர்
நீங்கள் தேடியது "கர்வாசவுத்"
- ‘கர்வாசவுத்’ பண்டிகை இந்திய கலாச்சாரத்தின் ஒரு அழகான பாரம்பரியத்தை கொண்டாடுகிறது.
- திருமணமாகாத மேரிமில்பென் தனது வருங்கால கணவருக்காக பிரார்த்தனை செய்து பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் வடஇந்தியாவில் திருமணமான பெண்கள் தனது கணவரின் நீண்ட ஆயுளுக்காக கொண்டாடும் 'கர்வாசவுத்' பண்டிகையை அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகியான மேரிமில்பென் கொண்டாடிய காட்சிகளை தனது எக்ஸ்தளத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்திய பாரம்பரிய உடையில் அலங்காரம் செய்த அவர் ஏராளமான நகைகள் அணிந்து 'கர்வாசவுத்' பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்துடன், அந்த பண்டிகையின் முக்கியத்துவத்தை விளக்கி பதிவிட்டுள்ளார். அதில் 'கர்வாசவுத்' பண்டிகை இந்திய கலாச்சாரத்தின் ஒரு அழகான பாரம்பரியத்தை கொண்டாடுகிறது. இதில் சமூக பிணைப்புகளை வலுப்படுத்தும் கொண்டாட்டமாகும் என குறிப்பிட்டுள்ளார். திருமணமாகாத மேரிமில்பென் தனது வருங்கால கணவருக்காக பிரார்த்தனை செய்து பண்டிகையை கொண்டாடி உள்ளார்.