search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பாளர் பணியிடம்"

    • ளைநிலங்களில் வலம் வரும் மயில்களை தடுக்க, மருந்து, விஷம் வைக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர்.
    • மாவட்டத்தில் மயில்கள் சுற்றித்திரியும் புதர்காடுகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பல்லடம், தாராபுரம், அவிநாசி, ஊத்துக்குளி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மயில்கள் பரவலாக காணப்படுகின்றன. அவ்வப்போது இறைச்சி மற்றும் தோகைக்காக, மயில்கள் வேட்டை யாடப்பட்டு வந்தது. இந்நிலையில் விளைநிலங்களில் வலம் வரும் மயில்களை தடுக்க, மருந்து, விஷம் வைக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே, மயில்களால் இடையூறு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அந்த இடத்தில் சேதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம், மயில்கள் ஆண்டு முழுவதும் விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவது கிடையாது. மாறாக, நாற்று நடும் காலம், விதைப்பு காலம் அல்லது அறுவடை காலம் எப்போது என்பதை தெரிந்து, மயில்களை விரட்டும் முயற்சியை துரிதப்படுத்த வேண்டும்.

    இது குறித்து தன்னார்வலர்கள் கூறும்போது, மாவட்டத்தில் மயில்கள் சுற்றித்திரியும் புதர்காடுகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. மயில்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால், எஞ்சிய பாதுகாக்கப்பட்ட வனங்கள், விளைநிலங்களில் மட்டுமே, அவை காணப்படுகின்றன. வனத்துறையினர், தன்னார்வலர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்தோ, மயில் காப்பாளர் எனும் புதிய பணியிடத்தை உருவாக்கியோ, அவைகளை பாதுகாக்க முன் வர வேண்டும். அப்போது தான், வேளாண் பயிர் சாகுபடியையும் பாதுகாக்க முடியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×