என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருந்து தயாரிப்பு நிறுவனம்"
- தேர்ந்தெடுத்த ஊழியர்கள் தொடங்கிய காலத்திலிருந்தே பணியாற்றுகிறார்கள்
- என் பணியாளர்கள் எனக்கு ஊழியர்கள் அல்ல; நட்சத்திரங்கள் என்றார் பாடியா
அரியானாவின் பஞ்ச்குலா (Panchkula) நகரில் உள்ள பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம், மிட்ஸ்கார்ட் (MitsKart). அதன் நிறுவனர் எம்.கே. பாடியா (M.K. Bhatiya).
தீபாவளி நெருங்கும் நேரத்தில் தனது ஊழியர்களுக்கு சிறப்பாக பரிசளித்து அவர்களை மகிழ்விக்க நினைத்தார் பாடியா. இதற்காக பணியாளர்களில் 12 பேரை தேர்வு செய்தார். அதில் 3 வருடங்களுக்கு முன் "ஆஃபீஸ் பாய்" (office boy) எனப்படும் கடைநிலை ஊழியராக சேர்ந்தவரும் ஒருவர். நிறுவனத்தை தொடங்கிய காலத்திலிருந்தே இவர்கள் அனைவரும் பாடியாவின் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.
இவர்களை மகிழ்விக்க நினைத்த பாடியா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் டாடா பன்ச் (Tata Punch) காரை பரிசளித்தார். இந்த டாடா பன்ச் காரின் ஆரம்ப மாடலின் விலை ரூ.6.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
"என்னை பொறுத்தவரை என் பணியாளர்கள் வெறும் ஊழியர்கள் அல்ல; அவர்கள்தான் நிறுவனத்தின் நட்சத்திரங்கள். கடுமையாக உழைத்து, நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்கும் பணியாளர்கள் எங்கிருந்தாலும் தங்கள் கனவுகளை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம்" என அவர்களுக்கு பரிசளிப்பது குறித்து பாடியா கூறினார்.
பாடியா பரிசாக காரை வழங்கும் வீடீயோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.