என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேக கட்டுப்பாடு"
- 1,272 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, 110 கி.மீ. வேகம் வரை விரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- தெற்கு ரெயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் 75 நிரந்தர வேக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
சென்னை:
தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கூடுதல்பாதை அமைப்பது, ரெயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
தெற்கு ரெயில்வேயில் ரெயில் பாதை மேம்படுத்தப்பட்ட முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் விரைவு ரெயில்கள் இயக்கப்படு கின்றன. அந்த வகையில், சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம்-ஜோலார் பேட்டை, சென்னை சென்ட்ரல்- ரேணிகுண்டா என மொத்தம் 413.62 கி.மீ.தூரத்துக்கு ரெயில் பாதைகள் மேம்ப டுத்தப்பட்டு, இப்பாதைகளில் அதிகபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை விரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
1,272 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, 110 கி.மீ. வேகம் வரை விரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரெயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் 75 நிரந்தர வேக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 170 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைந்துள்ளது.
தெற்கு ரெயில்வேயில் ரெயில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிக்காக மட்டும் மத்திய பட்ஜெட்டில் ரூ.1,240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்வேறு வழித்தடங்களில் தண்டவா ளம் மேம்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட உள்ளது. தண்டவாளம் புதுப்பித்தல், சிக்னல் மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற் கொள்ளப்பட உள்ளன. இதன்மூலம், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரெயில்களை இயக்க முடியும்.
- விதிமுறை தமிழகத்திலும் சமீபத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
- போக்குவரத்து காவல் துறையினர் சலானை அனுப்பி வருகின்றனர்.
வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை மீறி செல்லும் போது அபராதம் செலுத்த வேண்டும். இதே போன்ற விதிமுறை தமிழகத்திலும் சமீபத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
அதன்படி சென்னையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் செலுத்துவதற்கான சலானை அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், பயனர்கள் சலான் செலுத்துவதை தவிர்க்க செய்யும் நோக்கில், கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் புதிய வசதியை கொண்டுவந்து இருக்கிறது.
இதற்காக கூகுள் மேப்ஸ் சேவையில் எந்தெந்த பகுதிகளில் வேகக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன என்ற விவரங்களை உலகளவில் வழங்கிவருகிறது. அதன்படி உள்ளூர் சாலை ஒன்றில் செல்லும் போது வேகக்கட்டுபாடுகளுக்கு ஏற்ப சலான் பெறுவதை தவிர்க்க செய்யும் கூகுள் மேப்ஸ் அம்சத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
- ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை லான்ச் செய்யுங்கள்
- அக்கவுண்ட் செட்டிங்ஸ் (Account Settings) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- பிறகு செட்டிங்ஸ் (Settings) ஆப்ஷனில் உள்ள நேவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation Settings) ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்
- நேவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation Settings) ஆப்ஷனில் உள்ள டிரைவிங் ஆப்ஷன்ஸ் (Driving Options) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- டிரைவிங் ஆப்ஷன்ஸ் (Driving Options) ஆப்ஷனில் உள்ள ஸ்பீடோமீட்டர் (Speedometer) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- ஸ்பீடோமீட்டர் ஆப்ஷனை கிளிக் செய்ததும் கூகுள் மேப்ஸ் கொண்டு நேவிகேட் செய்யும் போது ஜி.பி.எஸ். வேகம் காண்பிக்கப்படும். இந்த அம்சம் வேகம் அதிகரிக்கும் போது நிறம் மாறி எச்சரிக்கை விடுக்கும்.
ஸ்பீடோமீட்டர் எப்படி வேலை செய்யும் என்பது பற்றி கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதன்படி ஏ.ஐ. தொழில்நுட்பம், ஸ்டிரீட் வியூ படங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு படங்களை பயன்படுத்தி கூகுள் மேப்ஸ் வேகக்கட்டுப்பாடு பற்றிய எச்சரிக்கையை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக உலகம் முழுக்க நூற்றுக்கும் அதிகமான அடையாள குறியீடுகளில் சோதனை செய்யப்பட்டது.
இவ்வாறு கூகுள் மேப்ஸ்-இல் உள்ள ஏ.ஐ. மாடல் ஒரு எச்சரிக்கை குறியீடை கண்டறிந்தால். உடனே ஜி.பி.எஸ். விவரங்களை கொண்டு அதில் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்தி அதற்கு ஏற்ப வேகக்கட்டுப்பாடு விதிகளை அப்டேட் செய்து கொள்ளும். இதோடு போக்குவரத்து முறைகளை கொண்டு வேகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும்.
- சப் இன்ஸ்பெக்டர் பொன் குமார் ஸ்பீட்ரேடார் கருவி மூலம் அதிவேகத்தில் வரும் வாகனங்களை கண்காணித்தனர்.
- சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி போலீசார் எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவொற்றியூர்:
சென்னையில் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. மோட்டார் சைக்கிள்கள் 50 கிலோமீட்டர், ஆட்டோக்கள் 40 கி.மீட்டர், கார்கள் 60 கி.மீட்டர், கனரக வாகனங்கள் 50 கி.மீட்டர் வேகத்திலும், உட்புற சாலைகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீட்டர் வேகத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து போக்குவரத்து போலீசார் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே ஸ்பீட் ரேடார் கண்காணிப்பு கருவி மூலம் கண்காணித்து வருகிறார்கள். எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து உதவி கமிஷனர் சீனிவாசன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் பொன் குமார் ஸ்பீட்ரேடார் கருவி மூலம் அதிவேகத்தில் வரும் வாகனங்களை கண்காணித்தனர்.
அப்போது அப்பகுதியில் வடக்கு மண்டலம் துணை கமிஷனர் குமார் ஆய்வு மேற்கொண்டார். முதல் நாளான நேற்று எண்ணூர் விரைவுச்சாலையில் அதிவேகத்தில் வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி போலீசார் எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன்று முதல் அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்