என் மலர்
நீங்கள் தேடியது "வடிகால் பணி"
- மழை பெய்தாலும் சில மணி நேரங்களில் வடிய வைத்து விடுகிறோம்.
- சென்னையில் 800 ஆக இருந்த தாழ்வான பகுதிகள் 37 ஆக தற்போது குறைந்து உள்ளன.
சென்னை, நவ.5-
சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் அவ்வப் போது பெய்து வரும் பருவ மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கா மல் இருப்பதற்காக எங்கெங்கு தண்ணீர் தேங்கும் என நினைக்கும் இடங்களில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இதன் காரணமாக சென்னையின் சாலைகளில் தண்ணீர் தேங்குவதில்லை. மழை பெய்தாலும் சில மணி நேரங்களில் வடிய வைத்து விடுகிறோம்.
புழல், ஆலந்தூர், அடையாறில் தேங்கிய மழைநீர் 1 மணிநேரத்தில் வடிய வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 326 சதுர கி.மீ. அளவில் வடிகால் பணி நடைபெற்றுள்ளன. சாலைகளில் பழுது ஏற்பட்டால் 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம். சென்னையில் 800 ஆக இருந்த தாழ்வான பகுதிகள் 37 ஆக தற்போது குறைந்து உள்ளன. மழை காரணமாக எதிர்பாராத நிலையை சமாளிக்கவும் மாநகராட்சி தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.