search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹமாஸ் ஆதரவாளர்கள்"

    • ஹமாஸ் அமைப்பை ஆதரிப்பவர்களுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் இயற்றியது
    • ஐ.நா. சபை எடுக்கும் முடிவுகளைத்தான் மலேசியா ஆதரிக்கும்

    தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சிறிய நாடு, மலேசியா. இதன் தலைநகரம் கோலாலம்பூர்.

    இந்தியாவை விட 10 மடங்கு பரப்பளவில் குறைந்த நாடான மலேசியாவில் இஸ்லாமிய சன்னி பிரிவினர் பெருமளவு (63 சதவீதம்) வாழ்கின்றனர். இந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim).

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன; பெரும்பாலான அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கும் வெளிநாட்டு அமைப்புகளுக்கும், அரசாங்கங்களுக்கும் எதிராக அமெரிக்க பாராளுமன்றம் கடந்த வாரம் தீர்மானம் இயற்றியது.

    இந்நிலையில், இது குறித்து மலேசிய பாராளுமன்றத்தில் அன்வர் இப்ராஹிம் பேசினார்.

    அப்போது அன்வர், "மலேசிய மக்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும். ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்று கொள்ள போவதில்லை. இனவெறியை எதிர்த்து ஆப்பிரிக்க மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை போல் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மக்களுக்காக போராடி வருகின்றனர். அமெரிக்கா எனும் தனிநாடு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கோ, அச்சுறுத்தலுக்கோ நான் அஞ்ச போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் முடிவுகளைத்தான் நாங்கள் அங்கீகரிப்போம்" என திட்டவட்டமாக அறிவித்தார்.

    காசாவின் மீதான் இஸ்ரேல் தாக்குதலை "காட்டுமிராண்டித்தனம்" என அன்வர் சில தினங்களுக்கு முன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×